Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒடிசாவில் தடம் புரண்ட பயணிகள் ரயில்.. மாடு குறுக்கே வந்ததால் விபரீதம்.. ஆனா மிகப்பெரிய ஆறுதல்!

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் பயணிகள் ரயில், மாட்டின் மீது மோதி தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை.

ஒடிசா மாநிலம் ஜகர்சுகுடா - சம்பல்பூர் இடையே பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் இந்த ரயில் ஜகர்சுடாவில் இருந்து புறப்பட்டு சம்பல்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது மாடு தண்டவாளத்தின் குறுக்கே வந்ததால் மாடு மீது மோதிய வேகத்தில் ரயில் தடம்புரண்டது.

Passenger train derailed after hitting cow in odisha

தண்டவாளத்தை விட்டு, ரயிலின் சக்கரம் சில அடிகள் கீழே இறங்கியது. என்ஜினில் இருந்து நான்காவது பெட்டியின் சக்கரங்கள் கீழே இறங்கின. உடனடியாக சுதாரித்த ஓட்டுநர், ரயிலை நிறுத்தியுள்ளார். இதனால், ரயில் கவிழாமல் தப்பியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் இல்லை. தகவலறிந்த ரயில்வே போலீசார் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மருத்துவ உபகரணங்களுடன் மறுசீரமைப்புக்கான நிவாரணப் பொருட்களைக் கொண்ட விபத்து நிவாரண ரயில் உடனடியாக அந்த இடத்தை அடைந்தது. ரயில் சக்கரம் தடம்புரண்ட தண்டவாளம் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, 2 மணி நேரத்திற்குப் பிறகு, ரயில், 30 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் தண்டவாளத்தில் பொருத்தப்பட்டு இயக்கத்தை தொடங்கியது.

கடந்த ஜூன் மாதம் ஒடிசா மாநிலம் பாலசோரில் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பீகார் மாநிலம் பாட்னா அருகிலும், ஆந்திர பிரதேச மாநிலம் விசாகபட்டினம் அருகிலும் ரயில் தடம் புரண்டு விபத்துகள் ஏற்பட்டு பலர் பலியாகினர். இந்நிலையில், இன்று ஒடிசா மாநிலத்தில் ரயில் தடம் புரண்ட நிலையில், உயிர் சேதம் ஏதும் இல்லாதது அனைவருக்கும் நிம்மதி அளித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+