பாஸ்போர்ட்டினை புதுப்பிக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் - சிபிஐயிடம் வசமாக சிக்கிய அதிகாரி
திருவனந்தபுரம்: கேரளாவில் பழைய பாஸ்போர்ட்டினை புதுப்பிக்க ரூபாய் 50 ஆயிரம் லஞ்சம் கேட்ட பாஸ்போர்ட் கேந்திரா அதிகாரி சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வந்த நபரிடம் 50 ஆயிரம் லஞ்சம் கேட்டு மாட்டிக் கொண்டுள்ளார் அதிகாரி ராமகிருஷ்ணன்.

கொச்சியை சேர்ந்த நபர் ஒருவர் பாஸ்போர்ட் புதுப்பிக்க அந்த அதிகாரியை அணுகியுள்ளார். அவரோ புதுப்பிக்க ரூபாய் 50 ஆயிரம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் மலப்புரம் பாஸ்போர்ட் அலுவலகத்தில் நேற்று அதிரடி ரெய்டு நடத்திய சி.பி.ஐ லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற முயன்ற குற்றத்துக்காக ராமகிருஷ்ணனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications