பதன்கோட் தாக்குதல்: விமானப்படை தளத்தில் பணியாற்றும் யாரேனும் உதவினரா?: என்ஐஏ விசாரணை
டெல்லி: பதன்கோட் தாக்குதல் வழக்கில் விமானப்படை தளத்தில் உள்ள யாராவது உதவி செய்திருக்கிறார்களா என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப் படை தளத்திற்குள் கடந்த மாதம் 2ம் தேதி தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 7 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகளில் இரண்டு பேர் தாக்குதல் நடத்துவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே விமானப்படை தளத்திற்குள் நுழைந்தது தெரிய வந்துள்ளது. 4 தீவிரவாதிகள் ஜனவரி 2ம் தேதி விமானப்படை தள சுவரில் ஏறி உள்ளே குதித்துள்ளனர்.
தீவிரவாதிகள் 60 கிலோ எடை கொண்ட வெடிபொருட்கள், ஆயுதங்களுடன் எப்படி உள்ளே நுழைந்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. தீவிரவாதிகளுக்கு விமானப்படை தளத்தில் இருந்து யாராவது உதவியிருக்கிறார்களா என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
தீவிரவாதிகள் விமானப்படை தளத்திற்கு தீ வைக்க திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அங்கிருந்த விமானங்கள் மீது வீச வெடிமருந்துகளை கூட எடுத்து வந்துள்ளனர். தீவிரவாதிகள் விமானப்படை தளத்திற்கு அருகே வெடி பொருட்களை இரண்டு நாட்களாக வைக்க யாராவது உதவியிருக்கக்கூடும். அந்த நபர் விமானப்படை தளத்தில் உள்ளவரா என்று விசாரணை நடந்து வருகிறது.
இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு பலரிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications