தீவிரவாதிகளுக்கு பதன்கோட் விமானப்படை தளத்தில் உள்ள யாராவது உதவி செய்தார்களா?
பதன்கோட்: பதன்கோட் விமானப்படை தளத்தில் உள்ளவர்கள் யாராவது தீவிரவாதிகளுக்கு உதவி செய்தார்களா என்று தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்திற்குள் புகுந்த 6 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 7 பேர் பலியாகினர், 20 பேர் காயம் அடைந்தனர். மூன்று நாட்களாக நடந்த தாக்குதலில் 6 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவ்வளவு பாதுகாப்பான விமானப்படை தளத்திற்குள் தீவிரவாதிகள் எப்படி நுழைந்தார்கள் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஒரு சம்பவத்தால் விமானப்படை தளத்தில் உள்ள யாராவது தீவிரவாதிகளுக்கு உதவி செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.
2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இருக்கும் விமானப்படை தளத்திற்குள் இரண்டு பிரிவுகளாக சென்ற தீவிரவாதிகள் சரியாக குறிப்பிட்ட இடத்தில் சந்தித்துள்ளனர். பரந்து விரிந்த விமானப்படை தளத்தில் குறிப்பிட்ட இடத்தில் சந்திப்போம் என்று கூறி தீவிரவாதிகள் சந்தித்துள்ளது அங்குள்ள யாரோ அவர்களுக்கு உதவி செய்திருப்பார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து விமானப்படை தளத்தில் உள்ள யாராவது உதவி செய்தார்களா என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரித்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications