
அட கடவுளே.. இப்படியா நடக்கணும்.. நடுவழியில் கைவிட்ட ஆம்புலன்ஸ்.. மரணித்த நோயாளி..உச்சக்கட்ட கொடுமை
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் வீட்டில் மயங்கி விழுந்த 40 வயது நிரம்பிய நபர் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த வேளையில் ஆம்புலன்ஸில் நடந்த சம்பவம் ஒன்று அவரது உயிரையே பறித்த சோகம் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்வாரா மாவட்டம் தானபூர் கிராமத்தை சேர்ந்தவர் தேஜியா (வயது 40). இவர் அந்த பகுதியில் உள்ள தனது மகளின் வீட்டில் கடந்த 3 மாதங்களாக தங்கியிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தேஜியா திடீரென்று மயங்கி விழுந்தார். இதை பார்த்து அவரது மகளும், மருமகனும் அதிர்ச்சியடைந்தனர்.
ஆரத்தி வீடியோ.. ராகுலை கிண்டல் செய்ய முயன்று வசமாய் சிக்கிய 2 பாஜக தலைவர்கள்.. நெட்டிசன்கள் விளாசல்

கிராமத்துக்கு வந்த ஆம்புலன்ஸ்
தேஜியாவை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டி அவர்கள் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் வேகமாக கிராமத்துக்கு வந்தது. இதையடுத்து தேஜியா ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டார். அவருடன் மகளும், மருமகனும் சென்றனர். தானபூர் கிராமத்தில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் மாவட்ட அரசு மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தது.

திடீரென்று நின்ற ஆம்புலன்ஸ்
ரத்லம் சாலையில் ஆம்புலன்ஸ் வாகனம் வேகமாக சென்றது. அப்போது திடீரென்று ஆம்புலன்ஸ் நின்றுபோனது. இதையடுத்து ஆம்புலன்ஸில் இருந்தவர்கள் என்னாச்சி? என டிரைவரிடம் கேட்டனர். அதற்கு அவர் ஆம்புலன்ஸில் எரிபொருள் இல்லை என தெரிவித்தார். இதையடுத்து எரிபொருள் நிரப்ப அவர்கள் ரூ.500 வழங்கினர். இருப்பினும் ஆம்புலன்ஸ் வாகனம் அங்கிருந்து கொஞ்சம் கூட நகரவில்லை.

தள்ளியும் இயங்காத
இதனால் தேஜியாவின் மகள் மற்றும் மருமகன் இருவரும் ஆம்புலன்ஸில் இருந்து இறங்கி ஒரு கிலோமீட்டர் தொலைவு ஆம்புலன்ஸை தள்ளி சென்றனர். இருப்பினும் ஆம்புலன்ஸ் மீண்டும் இயங்கவில்லை. அந்த பகுதியில் வேறு யாரும் வராததால் எரிபொருள் வாங்கி வரவும் முடியவில்லை. இதையடுத்து வேறு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அதில் தேஜியா ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இறந்து போன தேஜியா
மருத்துவமனையில் டாக்டர்கள் தேஜியாவை பரிசோதித்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்துபோய் விட்டதாக தெரிவித்தனர். இதனால் தேஜியாவின் மகள் மற்றும் மருமகன் கண்கலங்கினர். மேலும் ஆம்புலன்ஸ் வாகனம் டீசல் இன்றி நின்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க ஒரு மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டது. இது தான் உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டினர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அரசு மீது விமர்சனம்
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக அசோக் கெலாட் உள்ளார். சமீபத்தில் அசோக் கெலாட் தனது மாநில சுகாதாரத்துறை குறித்து பெருமையாக பேசினார். இந்தியாவிலேய சிறந்த சுகாதார வசதிகள் ராஜஸ்தானில் தான் உள்ளது என கூறியிருந்தார். இந்நிலையில் தான் தற்போது ஆம்புலன்ஸ் வாகனம் எரிபொருள் இன்றி நின்ற நிலையில் ஒருவர் இறந்துள்ளார். இதனால் நெட்டிசன்கள் ராஜஸ்தான் மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசை விமர்சனம் செய்து வருகின்றனர்.