காதலியுடன் வீடியோகால் பேசிக்கொண்டே உயிரை விட்ட பாட்னா இளைஞர்!... திக் திக் நிமிடங்கள்!
பாட்னாவை சேர்ந்த 19 வயது இளைஞர் காதலியுடன் வீடியோ கால் பேசிக்கொண்டேதுப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரை விட்ட சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா: பாட்னாவை சேர்ந்த 19 வயது இளைஞர் காதலியுடன் வாட்ஸ் அப்பில் வீடியோ கால் பேசிக்கொண்டே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரை விட்ட சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னாவின் சாய்சக் பகுதியில் வசித்து வந்தவர் 19 வயது ஏ.கே.ஏ.ஆகாஷ் குமார். இவர் தனது வீட்டு படுக்கை அறையில் தலையில் குண்டு காயத்திடன் இறந்து கிடந்தார். அவர் அருகே கைத்துப்பாக்கியும் ஒரு வார இதழும் கிடந்தன.

தனது காதலியுடன் வாட்ஸ் ஆப்பில் வீடியோ கால் மூலம் பேசிக்கொண்டிருந்த அந்த இளைஞர் அப்போது தலையில் துப்பாக்கியை வைத்து சுட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டி உள்ளார். அப்போது அந்த இளம்பெண் துப்பாக்கியை கீழே போடும்படி கூறியுள்ளார். ஆனால் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்த ஆகாஷ் விரல் தற்செயலாக துப்பாகியில் பட்டதில் குண்டு அவனுடைய தலையில் துளைத்ததாக தெரிகிறது.
ஆகாஷ் உடலை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் இளைஞர் தேர்வில் தோல்வியடைந்ததால் அவரது குடும்பத்தினர் காதலை கைவிடும் படி கூறி வந்ததாகவும் தெரிகிறது. இதனால் ஆகாஷ் மன அழுத்தத்தில் இருந்ததும் தெரியவந்துள்ளது. ஆகாஷின் உறவினர் அளித்த புகாரின் பேரில்
போலீசார் ஆகாஷின் காதலி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆகாண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது எதிர்பாராமல் நடந்த மரணமா என்ற கோணத்தில் போலீசார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications