பாட்னா தொடர்குண்டுவெடிப்பு: ஜார்கண்ட் மாநிலத்திச் சேர்ந்த 3 சதிகாரர்கள் கைது
பாட்னா: பாட்னா தொடர் குண்டுவெடிப்பில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று ரயில் நிலையம், திரையரங்கு மற்றும் நரேந்திர மோடி பேசிய காந்தி மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகள் என 7 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 5 பேர் பலியாகினர். 80க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ரயில் நிலைய கழிவறை அருகே குண்டு வெடித்த போது அங்கிருந்து சந்தேகத்திற்உ இடமான வகையில் தப்பி ஓடிய ஒருவரைப் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, மேலும் இரு சதிகாரர்களைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிடிபட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று பீகார் மாநில போலீஸ் கூடுதல் டி.ஜி.பி., எஸ்.என்.பிரதான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications