பாட்னா குண்டுவெடிப்பு தீவிரவாதிகள் நேபாளத்துக்கு தப்பி ஓட்டம்?
டெல்லி: பாட்னா தொடர் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதிகள் நேபாளத்துக்கு தப்பி ஓடியிருக்கலாம் என்று பீகார் போலீசாருக்கு தேசிய புலனாய்வு ஏஜென்சி தகவல் அனுப்பியுள்ளது.
குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, பாட்னாவில் கலந்து கொண்ட கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 9 பேர் பலியாகினர்.100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு அவர்கள் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்தோர் என்ற குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டனர். முக்கிய தீவிரவாதிகளை கைது செய்ய தேசிய புலனாய்வு ஏஜென்சி தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்நிலையில் இந்திய-நேபாள எல்லையில் பீகார் மாநில மாவட்டங்களில் பாட்னா குண்டுவெடிப்பில் தொடர்புடைய நான்கு அல்லது ஐந்து தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும் அனேகமாக அவர்கள் நேபாளத்துக்கு தப்பி செல்லலாம் என்றும் தேசிய புலனாய்வு ஏஜென்சி தகவல் அனுப்பியிருக்கிறது.
இதைத் தொடர்ந்து நேபாள எல்லையோர பீகார் மாவட்டங்களில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications