நரேந்திர மோடியை சந்திக்கவில்லை: சரத்பவார் மறுப்பு
மும்பை: பாரதீயஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை கடந்த ஒரு ஆண்டில் ஒருபோதும் சந்தித்த்தில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
மத்திய வேளாண் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவார், நரேந்திர மோடியை டெல்லியில் கடந்த 17ந் தேதி ரகசியமாக சந்தித்து பேசியதாக, மராத்தி செய்தித்தாள் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சரத்பவார், நரேந்திர மோடியை சந்தித்து பேசியதாக வெளியான இந்த செய்தியால் தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் இதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த தகவல் அடிப்படை ஆதாரமற்றது என்றும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதுகுறித்து சரத்பவார், ‘டுவிட்டர்' வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘மாநில சுற்றுப்பயணம் மற்றும் டெல்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் வைத்து நரேந்திர மோடியை சந்தித்ததை தவிர, கடந்த ஒரு ஆண்டில் அவரை தனியாக ஒருபோதும் சந்தித்ததில்லை' என்று கூறியுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications