பேடிஎம் நிறுவனர் கைது: போலீஸ் அதிகாரி கார் மீது காரை மோதிவிட்டு சென்றதாக புகார் - நாளிதழ் செய்திகள்
இன்றைய (மார்ச் 14) நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
காவல்துறை துணை ஆணையர் கார் மீது தனது சொகுசு காரை மோதிவிட்டு, நிற்காமல் சென்ற பேடிஎம் நிறுவனர் கைது செய்யப்பட்டார் என தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லி மாளவியா நகரில் உள்ள பெட்ரோல் பங்கு நிலையத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி டெல்லி தெற்கு காவல் துணை ஆணையர் காரை, கான்ஸ்டபிள் தீபக் குமார் ஓட்டிச் சென்றுள்ளார்.
அரவிந்தோ சாலையில் உள்ள மதர் இன்டர்நேஷனல் பள்ளியின் கேட் எண் 3 அருகே மெதுவாக சென்று கொண்டிருந்தபோது, ஒரு நீல நிற சொகுசு கார் வேகமாக வந்து துணை ஆணையர் கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், காரை ஓட்டி வந்தது பேடிஎம் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான விஜய் சேகர் ஷர்மா என்பது தெரிய வந்தது. இதையடுத்து, காவல்துறையினர் விஜய் சேகர் ஷர்மாவை கைது செய்து, பிணையில் விடுவித்தனர்.
- ரிசர்வ் வங்கி கையேடு: எத்தனை விதமான நிதி மோசடிகள்? தற்காத்துக்கொள்வது எப்படி?
- கிரிப்டோகரன்சி என்றால் என்ன, நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக என்ன மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது?
இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், பேடிஎம் செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், 'விஜய் சேகர் ஷர்மா கைது செய்யப்பட்டு, விசாரணை அதிகாரியால் அதே நாளில் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் அல்லது வாகனத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கைது செய்யப்பட்டதன் தன்மையைக் கூறும் ஊடக அறிக்கைகள் மிகைப்படுத்தப்பட்டவை' என்று கூறியுள்ளார் என தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் இரண்டாவது பகுதி கூட்டத்தொடர் இன்று தொடக்கம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி இன்று தொடங்குகிறது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பிப்ரவரி 11-ஆம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி நிறைவடைந்த நிலையில் இரண்டாவது பகுதி கூட்டத்தொடர் இன்று நடைபெற உள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளார். அதன் மீதான விவாதமும் இன்று கூட்டத்தில் நடைபெறவுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, கூட்டத்தொடரின் முதல் பகுதியின்போது மாநிலங்களவை காலையிலும், மக்களவை மாலையிலும் கூடி செயல்பட்டன. தற்போது கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், இரு அவைகளும் ஒரே நேரத்தில் செயல்படவுள்ளன.
- பாஜக, ஆம் ஆத்மியின் வெற்றி தென் மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
- இந்திய அரசியலில் தாக்கம் செலுத்தும் உபி, பஞ்சாப் தேர்தல் முடிவுகள் - எப்படி?
கூட்டத்தொடரின் முதல் பகுதியின்போது குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்றது பிறகு குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொண்டு இரு அவைகளிலும் விளக்கமளித்தார். அதையடுத்து அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தொடரின் 2-ஆவது பகுதியின்போது, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற ஏப்ரல் 8-ஆம் தேதி நிறைவடையவுள்ளதாக தினமணி செய்தி நாளிதழ் வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் முடிவு
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என 5 மாநில தேர்தல் தோல்விக்குப் பிறகு, 4 மணி நேரம் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என செய்தியை இந்து தமிழ் திசை நாளிதழ் வெளியிட்டுள்ளது.
உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து தோல்வி குறித்து ஆராய வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில், டெல்லியில் நேற்று மாலை காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது.
செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், மூத்த தலைவர்கள் கே.சி. வேணுகோபால், குலாம் நபி ஆஸாத், ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஆனந்த் சர்மா,கே.சுரேஷ், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட 5 தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இக்கூட்டத்தில் பங்கேற்பவர்கள் யாரும் செல்போன் எடுத்துவரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
- உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸ், பிரியங்காவின் பிரசாரம் எடுபடாமல் போனது ஏன்?
- காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் வீட்டில் தாக்குதல்: மனம் நொந்த ப.சிதம்பரம், தலைவர்கள் கண்டனம்
இதற்கிடையே தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று பொறுப்புகளில் இருந்து சோனியா, ராகுல்,பிரியங்கா ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் மறுத்தனர்.
இதனிடையே, செயற்குழு கூட்டம் நடைபெற்ற கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வெளியே குவிந்திருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்கக் கோரி முழக்கங்கள் எழுப்பினர்.
சுமார் நான்கரை மணி நேரத்துக்கும் மேலாக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முழுவிவரங்களை அறிக்கை வாயிலாக காங்கிரஸ் கட்சி வெளியிடவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதனிடையே கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடருவார் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, "கட்சியின் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார். எங்களை அவர் வழிநடத்திச் செல்வார். கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. கட்சியின் எதிர்காலத் திட்டங்கள், வரவிருக்கும் தேர்தல்கள் தொடர்பான முடிவுகளை சோனியா காந்தி எடுப்பார்" என்றார்.
மேலும், 2024 தேர்தலில் காங்கிரஸ் உடன் இணைந்து செயல்படத் தயார் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்திருந்த நிலையில், அதுகுறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கட்சியின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்ததாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
"பிற செய்திகள்:
- யுக்ரேன்: ரசாயன ஆயுதங்கள் என்றால் என்ன? ரஷ்யாவால் அதை பயன்படுத்த முடியுமா?
- ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை விதித்த செளதி அரேபியா – காரணம் என்ன?
- ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் வருமா?
- கொத்தமல்லி காதல்: இந்திய கலைஞரின் முயற்சிக்கு பெருகும் நெட்டிசன்களின் ஆதரவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!















Click it and Unblock the Notifications