மும்பையில் 'ஷ்மாஷிங்' வெற்றி பெற்ற மகன் அணி.. பரிசு கொடுத்து அசத்திய "கேப்டன்" விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

மும்பை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீரென ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவியில் தோன்றிய உடனே அவரது தொண்டர்களுக்கு எப்படி இருந்திருக்கும்... உற்சாகத்தில் விசிலடிக்க ஆரம்பித்து விட்டனர். பிரிமியர் பேட்மிட்டன் லீக் போட்டியில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனின் சென்னை ஷ்மாசர்ஸ் அணி வெற்றி பெறவே வீரர்களுக்கு பரிசளித்தார் விஜயகாந்த். அதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் லைவ் செய்தது.

கால்பந்து, கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டிகளைப் போல பேட்மின்டன் போட்டிகளுக்கும் பிரீமியர் லீக் போட்டிகள் இந்தியாவில் தொடங்கியுள்ளன.

இதில் சென்னை அணியை நடிகர் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன் எடுத்துள்ளார். இதற்கு சென்னை ஷ்மாஷர்ஸ் என்று பெயர் வைத்துள்ளார்.

PBL 2016 Captain Vijaykanth outshines Khiladi Akshay Kumar

2016ம் ஆண்டுக்கான பிரீமியர் லீக் பேட்மிண்டன் போட்டிகள் டெல்லி, மும்பை, பெங்களூரு, லக்னோ, ஹைதராபாத் நகரங்களில் நடைபெறுகின்றன. இந்த போட்டியில் சென்னை ஸ்மாசர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், ஐதராபாத் ஹண்டர்ஸ், டெல்லி அக்கர்ஸ், பெங்களூரு டாப்கன்ஸ், அவாதே வாரியர்ஸ் ஆகிய 6 அணிகள் மோதுகின்றன.

பிரீமியர் பேட்மிண்டன் போட்டி தொடக்க விழா ஜனவரி 2ம் தேதி சனிக்கிழமை மும்பை ஒர்லியில் உள்ள என்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது இந்த தொடக்க விழாவில் சென்னை ஸ்மாசர்ஸ் அணியின் உரிமையாளரும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மூத்த மகனுமான விஜய பிரபாகரன், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், நடிகர் சண்முகபாண்டியன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

3ம் தேதி நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் சென்னை ஸ்மாசர்ஸ் - மும்பை ராக்கெட்ஸ் அணிகள் மோதின. ஒர்லி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் இந்த போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் பிரபாகரனுக்கு சொந்தமான சென்னை ஸ்மாசர்ஸ் அணி, மும்பை ராக்கெட்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் சென்னை அணி 5-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் தொடக்கவிழாவில் பங்கேற்கவும், விளையாட்டினை காண, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா மற்றும் மகன்களுடன் மும்பைக்கு சென்றிருந்தார்.

மும்பை அணியின் பிராண்ட் அம்பாசிடரான பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும் போட்டியைக் காண வந்திருந்தார். போட்டி முடிந்ததும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை பரிசளிக்க வருமாறும் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து விஜயகாந்த், வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்து கூறி பரிசளித்தார். இந்த போட்டியை ஸ்டார் டி.வி.யில் லைவ் ஆக பார்த்த தேமுதிக தொண்டர்கள் உற்சாகத்தில் விசிலடித்தனர்.

‘சென்னை ஷ்மாஷர்ஸ்' அணியில் விளையாட பி.வி. சிந்து, சிக்கி ரெட்டி , ஜெர்ரி சோப்ரா , கிருஷ்ணபிரியா, ஆகிய இந்திய வீரர்களும், சோனி , சைமன்சன்டோசோ , பியா ஆகிய இந்தோனேஷிய வீரர்களும், மேலும் இங்கிலாந்தை சேர்ந்த கிரிஷ் ஆட்காக் , பிரான்ஸை சேர்ந்த பிரிஷ், கனடாவை சேர்ந்த டோபி, ஆகியோரும் தேர்வாகியுள்ளனர்.

சென்னை ஷ்மாஷர்ஸ் அணி இந்த தொடரின் இறுதி போட்டியில் வெற்றி பெற்றால் அதில் 50 தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக அளிப்பேன் என்றும் அணியின் உரிமையாளர் விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+