Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய 80,000 உயிர்கள்! ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து நன்றி கூறிய விஜயவாடா மக்கள்

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் பெய்த கனமழை, பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த வெள்ள பாதிப்பில் இருந்து நல்வாய்ப்பாக விஜயவாடாவின் கிருஷ்ணா லங்கா பகுதி பாதிக்கப்படாமல் தப்பிவிட்டது. இதற்கு கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பு சுவர்தான் காரணம். இதற்காக முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து, அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஆந்திரா, தெலங்கானாவில் பெய்த தொடர் மழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. மெஹபூபாபாத், நல்கொண்டா, வாரங்கல், ஆந்திராவில் என் டி ஆர், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நேற்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்தனர். குறிப்பாக விஜயவாடாவில் 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அதிக அளவில் மழை பெய்து இருப்பதால் பல இடங்கள் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது.

andhra telangana narendra modi

இதற்கிடையே மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற எதற்காகவும் வெளியே வரவேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ளவர்களை மீட்க தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளம் காரணமாக நேற்று மட்டும் சுமார் 140 ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. 97 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுகின்றன. வெள்ளம் காரணமாக ரயில் நிலையங்களுக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. எனவே, ராயனபாடு, கொண்டப்பள்ளி, தெனாலி, விஜயவாடா, நிடுப்ரோலு மற்றும் பாபட்லா ரயில் நிலையங்களில் சிக்கி தவித்த 6,000 பயணிகளுக்கு காலை உணவு மற்றும் குடிநீர் விநியோகிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வெள்ளம் காரணமாக ராயனபாடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் சிக்கியிருந்த பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. மட்டுமல்லாது ராயனாபவுட்டில் இருந்து விஜயவாடாவிற்கும், கொண்டப்பள்ளியிலிருந்து விஜயவாடாவிற்கும் 84 பேருந்துகள் ரயில்வே சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பயணிகள் மீட்கப்பட்டிருக்கின்றனர்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்பதால், பேரிடர் மீட்பு படையினர் முன்னெச்சரிக்கையாக இருக்கின்றனர். வெள்ள பாதிப்பு குறித்தும், மீட்பு பணிகள் குறித்தும் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரிடம், பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்துள்ளார். அதேபோல, மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தெலங்கானாவிலும் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் பாதித்திருக்கிறது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கிருஷ்ணா நதியை ஒட்டியுள்ள விஜயவாடாவின் கிருஷ்ணா லங்கா பகுதி வெள்ளம் பாதிக்காமல் தப்பித்திருக்கிறது. கிருஷ்ணா நதியின் ஓரத்தில் கட்டப்பட்ட வெள்ள தடுப்பு சுவர்தான் இதற்கு காரணம். எனவே முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்த தடுப்பு சுவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில்தான் கட்டப்பட்டது. கடந்த மார்ச் மாதம் இதனை ஜெகன் மோகன் ரெட்டி பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

ஒவ்வொரு பருவமழையின்போதும், கிருஷ்ணா லங்கா பகுதியில் உள்ள 80,000 மக்களை வெள்ளம் பாதித்து வந்தது. எனவே வெள்ளத்தை தடுக்கும் வகையில் தடுப்பு சுவர் அமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். இதனை கருத்தில் கொண்டு ரூ.500 கோடி மதிப்பில் வெள்ள தடுப்பு சுவர் கட்டும் பணிகளை ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். வெறுமென தடுப்பு சுவர் மட்டுமல்லாது.. பூங்கா, உடற்பயிற்சி கூடம், குழந்தைகள் விளையாடும் பகுதி ஆகியவை உருவாக்கப்பட்டது.

இப்படி உருவாக்கப்பட்ட இந்த தடுப்பு சுவர்தான் இன்று ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாத்திருக்கிறது. இதற்கு நன்றி தெரிவிக்க, ஜெகன் மோகன் ரெட்டியை அப்பகுதி மக்கள் நேரில் சந்தித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+