For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

BREAKING NEWS: சபரிமலையில் 144 தடை உத்தரவு.. !

கேரளாவில் சபரிமலை கோவிலின் நடை தற்போது திறக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு பெண்கள் வரக் கூடாது என்று எதிர்த்துப் போராடுவோரை தடியடி நடத்தி போலீஸார் ஒடுக்கிய நிலையில் தற்போது சபரிமலையைச் சுற்றிலும் 144 தடை உத்தரவை கேரள மாநில அரசு பிறப்பித்துள்ளது.

சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து பெரும் போராட்டம் நடக்கிறது. சபரிமலை அருகே உள்ள நிலக்கல், பம்பை, இளவங்கல் ஆகிய பகுதிகளில் பாஜக தலைமையிலான எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்தை தடியடி நடத்தி போலீஸார் கலைத்தனர். இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை தற்போது திறக்கப்பட்டு இருக்கிறது.

Recommended Video

    சபரிமலை செல்பவர்களின் பின்னணி விசாரிக்க வேண்டும் - எச்.ராஜா- வீடியோ
    People protesting against women entry into Sabarimala - LIVE UPDATES

    கோவிலுக்கு வெளியே கலவரம் நடக்கும் நிலையில் நடை திறக்கப்பட்டது. கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது பதட்டமான நிலை நிலவுவதால் பம்பை, சபரிமலை, நிலக்கல், இளவங்கல் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் நூகு தெரிவித்துள்ளார். இந்த தடை உத்தரவு ஐயப்ப பக்தர்களுக்குப் பொருந்தாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

    Newest First Oldest First
    4:57 PM, 17 Oct

    சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது

    கோவிலுக்கு வெளியே கலவரம் நடக்கும் நிலையில் நடை திறக்கப்பட்டது

    கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

    3:45 PM, 17 Oct

    நிலக்கல்லில் போலீஸார் சரமாரி தடியடி

    சபரிமலைக்கு பெண்கள் வருவதை எதிர்ப்போர் மீது தடியடி

    தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைக்கிறது போலீஸ்

    போலீஸ் தடியடியால் நிலக்கல் போர்க்களமாகியுள்ளது

    காலையில் சபரிமலைக்கு வந்த பெண்கள் தடுக்கப்பட்டனர்

    பெண் நிருபர்களின் கார் சேதப்படுத்தப்பட்டது

    தமிழகத்தைச் சேர்ந்த குடும்பத்தினரும் தாக்கப்பட்டதால் பரபரப்பு

    2:31 PM, 17 Oct

    செய்தி சேகரிக்க சென்ற 3 பெண் நிருபர்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல்

    நிலக்கல்லில் பதற்றம்

    2:07 PM, 17 Oct

    சபரிமலை கோயிலுக்கு செல்வோர் பின்னணி பற்றி விசாரணை தேவை-எச்.ராஜா

    பக்தி கொண்ட பெண்கள் சபரிமலை செல்ல காத்திருப்போம் என கூறிவிட்டனர்-எச்.ராஜா

    1:20 PM, 17 Oct

    சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்கள் செல்ல கேரள காங்கிரஸ் எதிர்ப்பு

    நிலக்கல் பகுதியில் காங்கிரஸ் தலைவர்கள் அமைதிவழி போராட்டம்

    1:20 PM, 17 Oct

    சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்கள் செல்ல கேரள காங்கிரஸ் எதிர்ப்பு

    நிலக்கல் பகுதியில் காங்கிரஸ் தலைவர்கள் அமைதிவழி போராட்டம்

    12:51 PM, 17 Oct

    சபரிமலை: பெண்களின் காலில் விழுந்து ஆதிவாசிகள் போராட்டம்

    கோவிலுக்கு வரும் பெண்களின் காலில் விழுந்து கோரிக்கை

    12:40 PM, 17 Oct

    பெண் நிருபரின் கார் மீது தாக்குதல்

    நிருபர் கார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசியதால் கார் கண்ணாடிகள் உடைப்பு

    சேதமடைந்த கார் கிரேன் மூலம் அகற்றம்

    12:40 PM, 17 Oct

    சபரிமலை வரும் பக்தர்களை யாரும் தடுக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்- கேரள அமைச்சர் எச்சரிக்கை

    சபரிமலையின் அமைதியை குலைப்பவர்கள் தடுத்து நிறுத்தப்படுவர்

    போராட்டக்காரர்களுக்கு கடகம்பள்ளி சுரேந்திரன் எச்சரிக்கை

    12:39 PM, 17 Oct

    சபரிமலை அருகே நிலக்கல்லில் கன மழை கொட்டுகிறது

    பக்தர்கள் போராட்டம் தீவிரமாகிய நிலையில் மழையாலும் பெண்கள் போக முடியாமல் பாதிப்பு

    12:39 PM, 17 Oct

    சபரிமலை அருகே நிலக்கல்லில் கன மழை கொட்டுகிறது

    பக்தர்கள் போராட்டம் தீவிரமாகிய நிலையில் மழையாலும் பெண்கள் போக முடியாமல் பாதிப்பு

    12:26 PM, 17 Oct

    சபரிமலை நிலக்கல் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

    சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து பெரும் போராட்டம்

    ஆயிரக்கணக்கான மக்கள் போராடி வருகிறார்கள்

    போராட்டம் காரணமாக பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது

    12:26 PM, 17 Oct

    சபரிமலை நடைதிறப்பையடுத்து போர்க்களமானது நிலக்கல் பகுதி

    பெண் பக்தர்கள் செல்லும் வாகனங்கள் மீது கல்வீச்சு

    தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்கிறது காவல்துறை

    12:25 PM, 17 Oct

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைந்தார் மாதவி

    40 வயதான மாதவி கோவிலுக்குள் நுழைந்து புதிய வரலாறு

    சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த முதல் பெண் என்ற பெயர் பெற்றார்

    சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் எதிரொலியாக சபரிமலைக்கு வந்தார் மாதவி

    மாதவியைத் தடுத்து நிறுத்தி போராட்டக்காரர்கள் வாக்குவாதம்

    மாதவிக்குப் போலீஸார் பாதுகாப்பு அளித்து கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்

    12:25 PM, 17 Oct

    ஜீன்ஸ் அணிந்து சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் இறக்கி விடப்பட்டார்

    பத்தனம்திட்டாவில் பஸ்ஸிலிருந்து அவரை இறக்கி விட்டனர் பக்தர்கள்

    சபரிமலைக்குச் செல்ல விடாமல் தடுத்து கெரோ செய்ததால் பரபரப்பு

    English summary
    People protesting against women entry into Sabarimala - LIVE UPDATES.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X