இது சின்ன வலிதான்... மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டும்! - பிரதமர் மோடி
டெல்லி: உயர் மதிப்பு ரூபாய் நோட்டு ஒழிப்பு சின்ன வலிதான். அதை நாட்டின் வளமான எதிர்காலத்துக்காக மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேலும் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது கருப்புப் பண ஒழிப்பின் தொடக்கம்தான் என்றும் அவர் கூறினார்.

டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடந்த பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி. ரூபாய் ஒழிப்பு அறிவிப்புக்குப் பிறகு நடக்கும் முதல் பாஜக எம்பிக்கள் கூட்டம் இது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது:
கருப்புப் பணம், ஊழல், முறைகேடுகளால் கடந்த 70 ஆண்டுகளாக ஏழை மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் சுரண்டப்பட்டு வருகின்றனர் என்று பிரதமர் மோடி இக்கூட்டத்தில் ஆதங்கம் தெரிவித்தார்.
நாம் (பாஜக) ஆட்சிக்கு வந்திருப்பது சுயலாபத்துக்காகவோ, நம்மைச் சார்ந்தவர்கள் நலனுக்காவோ அல்ல என்று தெரிவித்த அவர், ஏழைகளின் துயர் துடைக்கவே மக்கள் நமக்கு அதிகாரத்தை வழங்கியிருப்பதாகக் கூறினார்.
மேலும், கருப்புப் பணத்தின் ஆதிக்கத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இடரில் இருந்து அவர்களை மீட்க வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, பழைய ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை ஒரு தொடக்கம்தானே தவிர முடிவு அல்ல என்று உறுதிபடத் தெரிவித்தார்.
ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்ற விவகாரத்தில் மக்கள் அவதிப்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. பெரியதொரு மாற்றத்தை முன்னெடுக்கும்போது சிறிய வலியைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் தற்போது மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பது எதிர்காலத்தில் வளமான தேசம் அமைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான்," என்றார் அவர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications