மோடி பெயர் பொறித்த சூட்டுக்கு ரேட் வேகமாக கூடுகிறது.. ரூ. 1 கோடியைத் தாண்டியது ஏலம்!
அகமதாபாத்: அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்திருந்தபோது பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த அவரது பெயர் பொறிக்கப்பட்ட கோட்டை ஏலம் விடும் பணி தொடங்கியுள்ளது. காலையில் தொடங்கிய ஏலம் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. பிற்பகல் நிலவரப்படி அதன் தொகை ரூ. 1 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த கோட் மட்டுமல்லாமல் மோடிக்கு அன்பளிப்பாக வந்த 450 பிற பொருட்களும், பரிசுகளும் ஏலம் விடப்படுகின்றன. இதில் கிடைக்கும் பணத்தை கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு அளிக்கவுள்ளனராம். சூரத்தில் இன்று இந்த ஏலம் தொடங்கியது.

கடந்த மாதம் ஒபாமா டெல்லி வந்திருந்தபோது வித்தியாசமான கோட் போட்டிருந்தார் மோடி. அந்த கோட்டில் அவரது பெயரை கோடு போல அடித்திருந்தனர். இந்த கோட் மிகவும் காஸ்ட்லியானது என்று சர்ச்சை வெடித்தது. ராகுல் காந்தி கூட இதை கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால் வழக்கம் போல மோடி இதற்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை. வாயை மூடிக் கொண்டுதான் இருந்தார்.
இந்த சர்ச்சை கோட்தான் தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது மோடி போட்டிருந்த கோட், அகமதாபாத்தில் உள்ள ஜேட் ப்ளூ நிறுவனம் தயாரித்துக் கொடுத்ததாகும். இவர்கள்தான் மோடியின் டிரஸ்ஸைத் தைத்துக் கொடுத்து வருகிறார்கள். மேலும் மோடி குர்தாவுக்கும் இவர்கள் காப்பிரைட் வாங்கி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை ஏலம் தொடங்கியதுமே ராஜுபாய் அகர்வால் என்ற பாஜக தலைவர் ரூ. 51 லட்சத்திற்கு கோட்டை ஏலம் கேட்டார். அடுத்த சில நிமிடங்களில் சுரேஷ் அகர்வால் என்ற ஜவுளி அதிபர் ரூ. 1 கோடியாக ரேட்டை உயர்த்திக் கேட்டார். தொடர்ந்து ஏலம் நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணி வரை ஏலம் கேட்கலாம். அதன் பின்னர் கடைசியாக அதிக தொகைக்கு ஏலம் கேட்டவருக்கு கோட் சொந்தமாகும்.
மோடிக்கும், ஏலத்திற்கும் நிறைய சம்பந்தம் உள்ளது. முன்பு அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது கூட 18,000 முறை தனக்கு வந்த பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைத்த தொகையை பல்வேறு அறப் பணிகளுக்கு செலவிட்டார் என்பது நினைவிருக்கலாம். மேலும் பெண்கள் கல்விக்காக அவர் ரூ. 30 லட்சம் நிதியையும் ஏலம் மூலம் திரட்டிக் கொடுத்தவர் ஆவார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications