தலிபான் தாக்குதலுக்கு இந்தியாதான் காரணமாம்..."விஷத்தை"கக்கும் பாக். பாதுகாப்பு வல்லுநர்கள்!
டெல்லி: பெஷாவர் தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக தெஹ்ரிக் இ தலிபான் என்ற பாகிஸ்தான் தீவிர அமைப்பு பொறுப்பேற்ற நிலையிலும் கூட இதற்கும் இந்தியாதான் காரணம் என்று விஷத்தைக் கக்கி வருகின்றனர் ஐ.எஸ்.ஐ.யுடன் இயங்கி வரும் பாகிஸ்தான் பாதுகாப்பு வல்லுநர்கள்.
பெஷாவரில் பள்ளிக் குழந்தைகளை தலிபான்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் உலகை அதிர வைத்துள்ளது. இந்த சம்பவத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளதுடன் நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் நேற்று முதல் பாகிஸ்தான் பாதுகாப்பு வல்லுநர்கள் தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம் என்று பல விஷமனத்தனமான கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-யின் கைக்கூலிகளாகவும் அந்த அமைப்பின் செயல் திட்டத்துக்கு ஏற்றவாறும் கருத்துகளை ஊடகங்களில் முன்வைக்கும் கும்பல்தான் இது. இவர்களது விஷமக் கருத்துகளே இளைஞர்களை மூளை சலவை செய்து தீவிரவாதிகளாக்கி வருகிறது.
இதனை நிரூபிக்கும் வகையில்தான் பாகிஸ்தானின் பாதுகாப்பு துறை வல்லுநர் என்று அழைக்கப்படுகிற சையம் ஜயீத் ஜமான் ஹமீத், இந்தியாவே! உங்களது வன்முறையை நாங்கள் மன்னிக்கமாட்டோம்.. நீங்கள் டிசம்பர் 16-ந் தேதியை குறித்து வைத்து தாக்கியுள்ளீர்கள்.. நாங்கள் உங்களை ஒழிப்பதில் உறுதியாக உள்ளோம்" என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
பின்னர் தெஹ்ரிக்- இ- தலிபான்கள் பொறுப்பேற்பதாக அறிவித்த நிலையிலும் கூட , "இரக்கமற்ற பொறுப்பேற்றல்" என்று விமர்சித்ததுடன் அந்த அமைப்பே இந்தியாவின் நிதி உதவியுடன் செயல்படுகிறது என்று தமது ப்ளாக்கில் எழுதினார்.
போதும்தானே! இளைஞர்களை தூண்டிவிட்டாயிற்று.. அவசரப்பட்டு ஹமீத்தின் இந்தக் கருத்தை ஆதரித்து பலரும் இதேபோலவே பதிவு செய்துள்ளனர்.
@imran_sidra என்பவர், 1971ஆம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி இந்தியா- பாகிஸ்தான் போர் நடைபெற்றது. தற்போது 2014 டிசம்பர் 16-ந் தேதி இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது என்று எழுதியுள்ளார்.
நோசீன் சஃப்தார் என்பவரோ, இந்த தாக்குதலின் பின்னணியில் இருநாடுகள் இருக்கின்றன என்று குறிப்பிட்டு இந்தியா- ஆப்கானிஸ்தான் சதி என குறிப்பிடும்வகையில் ஹேஷ்டேக் போட்டுள்ளார்.
HawkEye @MyBoo911 என்பவர், பள்ளிக் கூட்டத்தில் தீவிரவாதிகள் வெடிக்க வைத்த குண்டுகள் 'இந்தியாவில்' தயாரிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
பெஷாவர் படுகொலைக்கு தலிபான்களே பொறுப்பேற்றுவிட்ட நிலையில் இந்தியா மீது அவதூறாக வன்மம் கக்க வைக்கிறது ஐ.எஸ்.ஐ.... அதனையே பாதுகாப்பு வல்லுநர்கள் என்ற போர்வையில் ஒரு சில கும்பலும் பரப்பிக் கொண்டு இருக்கிறது!
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications