மாட்டு வால கடிச்சிருவாங்களாம்.. ஜல்லிக்கட்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் போவதாக பீதி காட்டும் பீட்டா
டெல்லி: ஜல்லிக்கட்டுக்கான அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபோவதாக விலங்குகள் நல அமைப்பான பீட்டா அறிவித்துள்ளது.
2013ம் ஆண்டு பொங்கல் விழாவின்போது, தாங்கள் உத்தரவிட்டபடி, ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கான விதிமுறைகளை தமிழக அரசு சரியாக பின்பற்றவில்லை என்று கூறி கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிக்கையில், சில நிபந்தனைகள் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

பீட்டா கொதிப்பு
இதுகுறித்த அறிவிப்பு வந்த உடனேயே, பீட்டா அமைப்பு கொதித்து எழுந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்குவதற்கு முன் விலங்குகள் நல வாரியத்திடம் மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள பீட்டா, அவ்வாறு ஆலோசிக்காமல் வழங்கப்பட்ட இந்த அனுமதி, சட்டத்திற்கு புறம்பானது என்றும் குறிப்பிட்டுள்ளது.

வழக்கு
இந்த விவகாரத்தில், மத்திய அரசின் அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் விலங்குகள் நல அமைப்பான பீட்டா தெரிவித்துள்ளது.

போன் போகுதாமே
இதுகுறித்து, பீட்டாவின் தலைமை செயல் அதிகாரி பூர்வா ஜோசிபுரா கூறுகையில், காலை முதல் எங்கள் நிர்வாகிகளின் தொலைபேசிகளுக்கு தொடர்ந்து அழைப்புகள் வருகின்றன. பாஜக தொண்டர்கள் கூட போன் செய்து தங்கள் கண்டனத்தை தெரிவிக்கிறார்கள்.

அவுங்கதான் தடை பண்ணுணாங்க
2011ம் ஆண்டில் அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சகம்தான், காளைகளை வைத்து வித்தை காட்டுவதற்கு தடை விதித்தது. விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின்கீழ், 1960 முதலே, ஜல்லிக்கட்டு என்பது சட்ட விரோதமானதுதான்.

பாஜக பலவீனமாயிடுச்சாமே
பாஜக அரசு எடுத்துள்ள இந்த யூ-டர்ன் முடிவை, அவர்களின் தொண்டர்கள் பலவீனமானதாக பார்க்கிறார்கள். பாஜக தலைமைமீது கோபத்திலுள்ளார்கள்.

அடேங்கப்பா
மாடுகளுக்கு மது கொடுக்கப்படுகிறது, அவற்றின் வால் முறுக்கப்படுகிறது, வால் கடிக்கப்படுகிறது, அரிவாளால் வெட்டப்படுகிறது. மாடுகளின்மீது மக்கள் ஏறி விழுகிறார்கள். இதெல்லாம் கொடுமையாகும். இவ்வாறு பூர்வா ஜோசிபுரா கூறினார்.
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications