இந்திராணியை கழற்றிவிட முயன்றாரா பீட்டர் முகர்ஜி? இன்சூரன்ஸ் பாலிசியால் அம்பலம்
மும்பை: இன்சூரன்ஸ் தி்ட்டத்திற்கு, இந்திராணியை நாமினியாக நியமித்த அவரது கணவர் பீட்டர் முகர்ஜி, அதை நீக்க திட்டமிட்ட தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மும்பையை சேர்ந்த, ஷீனா போரா என்ற இளம் பெண்ணை கொலை செய்த வழக்கில் அவரது தாய் இந்திராணி கைது செய்யப்பட்டார். விசாரணை நடைபெற்ற நிலையில், அவரது கணவர் பீட்டர் முகர்ஜியும் சில தினங்கள் முன்பு கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீஸ் விசாரணையில் கிடைத்த தகவல்: பீட்டர் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து இரு இன்சூரன்ஸ் பாலிசிகளை, பெற்றிருந்தார். அதில் ஒரு இன்சூரன்ஸ் பாலிசி, பீட்டர் பெயரிலும், மற்றொன்று இந்திராணி பெயரிலும் வாங்கப்பட்டிருந்தது. மற்றொரு இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து தனது பெயருக்கு மட்டும் 2 வகை இன்சூரன்ஸ் பாலிசிகள் எடுத்திருந்தார் பீட்டர்.
அந்த இன்சூரன்ஸ் பாலிசியில் ஒன்று, பணம் திரும்ப கிடைக்கும் வசதி கொண்டது. இந்த பணம், பீட்டர்-இந்திராணி பெயரிலான ஜாயின்ட் அக்கவுண்ட் கணக்கிற்கு சென்றுகொண்டிருந்தது.
பீட்டர் தனது இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு நாமினியாக, இந்திராணி மற்றும் அவரது முன்னாள் கணவருக்கு பிறந்த வைதி என்ற மகள் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால், இந்திராணி சிபிஐயால் கைது செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு, போன் செய்த, பீட்டர் முகர்ஜி, தனது இன்சூரன்ஸ் நாமினிகளின் பெயர்களை, தனது மகன்கள் ராபின் மற்றும் ராகுல் ஆகியோர் பெயர்களில் மாற்றம் செய்ய முடியுமா என்று வினவியுள்ளார்.
இன்சூரன்ஸ் நிறுவனமும், அப்படியே செய்யலாம் என்று ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆனால் எழுத்துப்பூர்வமான வேண்டுகோளை கேட்டுள்ளது. ஆயினும் அந்த வேண்டுகோள் பீட்டர் தரப்பில் இருந்து தரப்படவில்லையாம். இந்த சம்பவத்தை வைத்து பார்க்கும்போது, இந்திராணியின் இந்திரஜால நடவடிக்கைகள் குறித்து தெரியவந்ததும், பயந்து போன பீட்டர், அவரிடமிருந்து தனது உறவை துண்டிக்க திட்டமிட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications