For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவில் வடியத் தொடங்கிய வெள்ளம்.. ஆனால் பெட்ரோல், டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு!

கேரளாவில் வெள்ளம் வடியத்தொடங்கிய நிலையில், அங்கே பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளம் வடியத் தொடங்கிய நிலையில், அங்கே பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க்குகளில் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர்.

கேரளாவில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிலும், நிலச்சரிவிலும் சிக்கி 380 பேர் பலியானார்கள். 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி சிக்கித் தவித்தது. 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர், கடற்படை, விமானப்படை வீரர்கலு சேர்ந்து மீட்டனர்.

 Petrol, Diesel shortage in Kerala; two wheelers waiting for hours in Petrol bank

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் ரூ.19,500 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். கேரளாவில் பல சாலைகள் வெள்ளத்தில் முழுவதுமாக சேதம் அடைதுள்ளது என்று தெரிவித்தார்.

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடரைக் மத்திய அரசு ரூ.600 கோடி அறிவித்தது. இந்தியாவின் மற்ற மாநிலங்களும் கேரள அரசுக்கு வெள்ள நிவாரண நிதி அளித்தன.

இந்நிலையில், கேரளாவில் வெள்ளம் வடியத்தொடங்கியுள்ளது. இதனால், மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை செய்ய தொடங்கியுள்ளனர். தங்களுடைய இருசக்கர வாகனங்களை எடுத்துக்கொண்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்திக்க செல்கின்றனர்.

தற்போது, கேரளாவில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் சில பெட்ரோல் பங்க்குகளில் இரு சக்கர வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் போட்டுக்கொண்டு செல்கின்றனர். பெட்ரோலுக்காக பங்க்குகளில் பல மணி நேரம் காத்திருந்து பெட்ரோல் போட்டுக்கொண்டு செல்கின்றனர்.

இருப்பினும் இந்த பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு விரைவில் சரியாகிவிடும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

English summary
The floods have been drying in Kerala. there now came to know Petrol, Diesel shortage. So the wheelers riders are waiting for hours in long queues at Petrol bank.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X