லாரி டிரைவர்கள் ஸ்டிரைக்: பெங்களூர் நகரில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு.. வாகன ஓட்டிகள் அவதி
பெங்களூர்: அடிப்படை வசதி கேட்டு லாரி டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் போராட்டம் நடத்தி வருவதால், பெங்களூர் நகரில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பெங்களூர் நகரத்திலுள்ள பெட்ரோல் பங்களுக்கு, தேவன்குந்தி, தேவனஹள்ளி, ஹொசபேட் ஆகிய முனைங்களில் இருந்து, எரிபொருள் எடுத்து வரப்படுகிறது. முனையங்களுக்கு செல்லும் சாலையை பழுது செய்ய வேண்டும், முனையத்தில், டிரைவர், கிளீனர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி டிரைவர் மற்றும் கிளீனர் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.

வேலை நிறுத்தம் காரணமாக, பெங்களூர் நகருக்குள் பெட்ரோல் சப்ளை தடை பட்டுள்ளது. பெங்களூர் பெட்ரோல் டீலர்கள் சங்கத்தின் செயலாளர் லோகேஷ் கூறுகையில், 600 லோடு எரிபொருளுக்கு பதிலாக 30 லோடு மட்டுமே திங்கள்கிழமை சப்ளையாகியுள்ளது. செவ்வாய்க்கிழமையான இன்று நிலைமை இன்னும் மோசமாகும் என்றார்.
நேற்று இரவு முதலே நகரின் பல பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் இல்லை என்ற அறிவிப்பை பார்க்க முடிந்தது. பெட்ரோல் கிடைக்கும் பங்க்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை இன்று பார்க்க முடிந்தது. இன்று முதல் டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
-
கற்பனைக்கு எட்டாத உச்சத்தில் விலைகள் உயர்வு.. நிர்மலா சீதாராமன் சொன்ன மேஜர் விஷயம் -
பட்ஜெட்டில் துண்டு போடும் பெட்ரோல் விலை.. இந்தியாவிலேயே உச்சம் எங்கு தெரியுமா? சென்னைக்கு எந்த இடம் -
நிலைமை கையை மீறிப்போகுது! இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! சென்னையில் புதிய உச்சம்! -
ஜூன் துவங்கியதும் அதிர்ச்சி.. இக்கட்டான கட்டத்தில் ஆர்பிஐ.. மக்களே உஷார்! -
மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. உங்களின் 1 வருட பட்ஜெட்டையே காலி செய்யும்.. எப்படி தெரியுமா? -
திணறும் மத்திய அரசு! 1 மணிநேரத்திற்கு ரூ.25 கோடி இழப்பு.. பெட்ரோல், டீசல் விலையை 4 முறை உயர்த்தியும் இப்படி! -
நாடு முழுவதும் அதிரடியாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. பொதுமக்களுக்கு மீண்டும் ஒரு பேரதிர்ச்சி -
“ரூ.10 எக்ஸ்ட்ரா கொடுக்க வேண்டியிருக்கும்..” பெட்ரோல் விலை குறித்து வாயை விட்ட நிர்மலா சீதாராமன் -
இனி நிறுத்த முடியாது.. தக்காளி, வெங்காயம், காய்கறி விலை உயர போகுது.. இடியை இறக்கும் அறிவிப்பு! -
பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி.. எல்லாமே அடுத்தடுத்து உயருகிறதே.. இனி கட்டுப்படுத்தவே முடியாது! -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது












Click it and Unblock the Notifications