பூலான் தேவி கொலை வழக்கு: ஷேர் சிங் ரானா குற்றவாளி; 11 பேர் விடுதலை

கொள்ளைக்காரியாக இருந்து பண்டிட் குயின் என பிரபலமாக அறியப்பட்ட பூலான் தேவி, சிறையில் இருந்து விடுதலை ஆனதும் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானார்.
அவருக்கு டெல்லியில் லோக்சபாவிற்கு அருகே உள்ள அசோகா ரோட்டில் 44-ம் எண் வீடு ஒதுக்கப்பட்டு இருந்தது. நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் காலங்களில் பூலான்தேவி அந்த வீட்டில் தங்கி இருந்து, சபைக்கு சென்று வருவது வழக்கம்.
2001-ம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வந்தது. எனவே, பூலான்தேவி டெல்லி வந்து நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.
25-7-2001 அன்று நாடாளுமன்றக் கூட்டத்துக்கு சென்ற பூலான்தேவி பகல் 1-30 மணி அளவில் மதிய சாப்பாட்டிற்காக காரில் வீடு திரும்பினார். அவருடன் பாதுகாவலர் பல்வீந்தர்சிங் சென்றார். வீட்டு முன் கார் நின்றதும் பூலான்தேவி இறங்கினார்.
கேட்'டை திறப்பதற்காக பல்வீந்தர்சிங் முன்னால் சென்றார். அப்போது, திடீரென்று முகமூடி அணிந்த 3 மர்ம மனிதர்கள் பூலான்தேவியை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதை பார்த்ததும் பல்வீந்தர்சிங், மர்ம மனிதர்களை நோக்கி திருப்பி சுட்டார். ஆனால் அவரையும் அந்த மர்ம மனிதர்கள் சுட்டு வீழ்த்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
துப்பாக்கியால் சுடும் சத்தத்தைக் கேட்டு, வீட்டிற்குள் இருந்த வேலைக்காரர்கள் ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பூலான்தேவியையும், பாதுகாவலர் பல்வீந்தர்சிங்கையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே பூலான்தேவியின் உயிர் பிரிந்து விட்டது.
பழிக்கு பழி வாங்கும் விதமாக நடந்த இந்த கொலை குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்து 13 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில், முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஷேர் சிங் ரானாவை குற்றவாளி என்றும், மற்ற 11 பேரும் விடுதலை செய்யப்படுவதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications