காஷ்மீர் சிறுமியின் பள்ளி சீருடையை வைத்து கதறும் தாய்.. இறுதிச்சடங்கில் நடந்த கொடூரம்!

காஷ்மீரில் கொல்லப்பட்ட 8 வயது சிறுமியின் பள்ளி சீருடைகளை வைத்து, அவரின் தாய் நசீமா பிபி கண்ணீர் விடும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காஷ்மீரில் ஆசிஃபா என்ற சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை

    காஷ்மீர்: காஷ்மீரில் கொல்லப்பட்ட 8 வயது சிறுமியின் பள்ளி சீருடைகளை வைத்து, அவரின் தாய் நசீமா பிபி கண்ணீர் விடும் புகைப்படம் வெளியாகி உள்ளது. சிறுமியின் இறுதிச்சடங்கில் கூட பிரச்சனை நடந்ததாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    காஷ்மீரில் இருக்கும் கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது பள்ளி படிக்கும் சிறுமி ஒருவர் 7 பேரால் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார். இந்த கொலை மற்றும் வன்புணர்வு வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    Photo of Kashmir girl childs Mom crying with her uniform becomes viral

    இதில் தொடர்புடைய எல்லோரும் பாஜக உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவா அமைப்புகளுடன் நெருக்கமாக இருப்பவர்கள். இதனால் இந்த வழக்கு விசாரணை ஆரம்பத்தில் பெரிய அளவில் நடத்தப்படவில்லை. இப்போதுதான் மக்கள் எதிர்ப்பை அடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கொல்லப்பட்ட சிறுமியின் பள்ளி சீருடைகளை வைத்து, சிறுமியின் தாய் நசீமா பிபி கண்ணீர் விடும் புகைப்படம் வெளியாகி உள்ளது. என்னிடம் அவள் நினைவாக மிச்சம் இருப்பது இதுமட்டுதான், இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் அவளை காட்டு பக்கமே அனுப்பி இருக்க மாட்டேன் என்று பேட்டி அளித்துள்ளார்.

    அதே சமயம் அந்த சிறுமியின் இறுதி சடங்கில் கூட பிரச்சனை செய்யப்பட்டுள்ளது. இந்துத்துவா அமைப்புகள், சிறுமியின் அப்பாவிற்கு சொந்தமான நிலத்தில், சிறுமியின் உடலை அடக்க செய்ய கூட விடவில்லை. இதனால் 7 கிமீ தூரத்தில் இருக்கும் பக்கத்து கிராமத்தில் அவளது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இந்த வழக்கில் இன்னும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பாஜக கட்சி இதில் சில ஆட்களை காப்பாற்றுவதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு வைத்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+