30 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு... குளிப்பதை படமெடுத்த பள்ளி முதல்வரின் கொடூரம்
பெங்களூர்: கர்நாடகாவில் பள்ளி முதல்வர் ஒருவர் 30 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவிகள் குளிப்பதை படமெடுத்தும் ரசித்துள்ளான் அந்த காமக்கொடூரன்.
பெங்களூர் அருகே உள்ள அனேக்கல் தாலுகாவை சேர்ந்த பள்ளியின் முதல்வர் ஒருவர் அப்பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
52 வயதான மல்லிகார்ஜுன் கார்கே என்ற காமக்கொடூரன் பள்ளி வளாகத்தில் மது அருந்தியதை அம்மாநிலத்தில் உள்ள தொலைக்காட்சிகள் ஒளி பரப்பின. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டான்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பள்ளி வளாகத்திலேயே மது அருந்தியதுடன் கிட்டத்தட்ட 30 பெண்களுக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்திருப்பது தெரியவந்தது.
போதை தலைக்கேறிய பின் மாணவிகளிடம் அவர்களது தலையணையை எடுத்து வரச்சொல்லி கனவுகளில் மிதப்பது அவரது வாடிக்கை.
ஹாஸ்டலில் உள்ள பாத்ரூமின் கதவுகளின் தாழ்ப்பாள்களை கழற்றியதுடன் மாணவிகள் குளிப்பதையும் புகைப்படம் எடுத்து ரசித்துள்ளான் இந்த காமுகன். குழந்தைகள் நல ஆணைய குழுவினர் பள்ளி மாணவிகளிடம் நடத்திய விசாரணையின் மூலம் மேலும் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளது.
குறிப்பாக 15 வயது மாணவி ஒருவருக்கு கார்கே தொடர்ந்து பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக பெண்கள் ஆணைய உறுப்பினரான விசாலாட்சி கூறியுள்ளார்.
தனக்கு நேர்ந்த கொடுமைகளை அந்த மாணவி மாஜிஸ்திரேட் நீதிபதியிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார். அதில் தன்னிடமும் மற்ற மாணவிகளிடமும் தகாத முறையில் நடந்ததுடன் உடலில் பல பாகங்களில் கை வைத்ததையும் அம்மாணவி வேதனையுடன் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பெங்களூர் ஊரக கண்காணிப்பாளரான பி.ரமேஷ் தலையிட்ட பின் வழக்குப்பதிவு செய்து அவரை காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications