டெல்லியில் அக்கிரமம்... பீட்சா கொடுக்க வந்த இடத்தில் 4 வயது சிறுமியை சீரழித்த டெலிவரி மேன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் பீட்சா டெலிவரி கொடுக்க வந்த இடத்தில் 4 வயது சிறுமியிடம் பாலியல் வக்கிரச் செயலில் ஈடுபட்ட டெலிவரி மேன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த நபரைப் போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
தெற்கு டெல்லியில் உள்ள ஒரு வீட்டில் ஒரு கடைசியில் பீட்சா ஆர்டர் செய்துள்ளனர். அந்த ஆர்டர் செய்த பீட்சாவை, அமீத் என்பவரிடம் கொடுத்து அனுப்பியது நிறுவனம்.
பீட்சாவை எடுத்துக் கொண்டு சென்ற அமீத், அந்த வீட்டுக்குப் போயுள்ளார். அப்போது அங்கு இருந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க ஆரம்பித்தார். இதையடுத்து சிறுமி அழுது சத்தம் போடவே, வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். இதையடுத்து அமீத் ஓடி விட்டார்.
அக்குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுக்கவே, போலீஸார் சம்பந்தப்பட்ட பீட்சா கடைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி பின்னர் அமீத்தைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications