பஞ்சாபில் மீன் வாயுடன் பிறந்துள்ள 'பிளாஸ்டிக் குழந்தை'
Subscribe to Oneindia Tamil
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் பெண் ஒருவர் பெற்றுள்ள குழந்தை பார்ப்பதற்கு ரப்பர் பொம்மை போன்று உள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குரு நானக் தேவ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவர் பெண் குழந்தையை பெற்றுள்ளார். அந்த குழந்தை பார்ப்பதற்கு ரப்பர் பொம்மை போன்று உள்ளது.

இது குறித்து டாக்டர்கள் கூறுகையில்,
அந்த குழந்தையின் தோல் பிளாஸ்டிக் போன்று பளபளப்பாக உள்ளது. குழந்தையின் வாய் மீன் வாய் போன்று இருக்கிறது. குழந்தையின் கண்களும், உதடுகளும் ரத்தசிவப்பு நிறத்தில் உள்ளன. லாமெல்லார் இச்தியோசிஸ் என்ற அரிய வகை மரபணு கோளாறால் குழந்தை இவ்வாறு உள்ளது. 6 லட்சத்தில் ஒருவருக்கு இந்த குறைபாடு ஏற்படும் என்றனர்.
பிளாஸ்டிக் குழந்தை என்று அழைக்கப்படும் அந்த குழந்தை பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications