முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ய சர்வதேச குழு.. உச்சநீதிமன்றத்தில் வக்கீல் மனு
டெல்லி: முல்லை பெரியாறு அணையை முடக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வக்கீல் ஒருவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி: முல்லைப் பெரியார் அணை பலவீனமாக உள்ளது. இயற்கை சீற்றம் ஏற்பட்டால் அணை உடையும் அபாயம் உள்ளது. இது அனணப்பகுதி அருகே வசிக்கும் மக்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பு உரிமைக்கு எதிரானது என்று கூறி வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

முல்லை பெரியார் அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், அதில் தமிழ்நாடு 142 அடி உயரம் வரை தண்ணீர் சேமிக்கலாம் எனவும் 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த 2014ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதை மறுபசீலனை செய்யக்கோரி கேரள அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால் அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கில் மீண்டும் ஒரு திருப்பமாக, வழக்கறிஞர் ரஸல் ஜாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் முல்லை பெரியாறு குறித்து ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
முல்லைப் பெரியார் அணை பலவீனமாக உள்ளது. இயற்கை சீற்றம் ஏற்பட்டால் அணை உடையும் அபாயம் உள்ளது. இது அனணப்பகுதி அருகே வசிக்கும் மக்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பு உரிமைக்கு எதிரானது.
அணையை ஆய்வு செய்து அதன் செயல்பாட்டை நிறுத்த சர்வதேச நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். அணை பாதுகாப்பு தொடர்பான அமெரிக்க விதி முறைப்படி நிபுணர் குழு அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications