முதுகுவலி: இந்த ஆண்டும் பட்ஜெட்டை அமர்ந்து வாசித்த அருண் ஜெட்லி!
டெல்லி: மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தனது பட்ஜெட் உரையை லோக்சபாவில் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டு வாசித்தார். கடந்த ஆண்டு பட்ஜெட் வாசிக்கும் போது முதுகுவலி காரணமாக சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் இருக்கையில் அமர்ந்து கொண்டு வாசித்தார். இந்த ஆண்டு சபாநாயகரின் வேண்டுகோளை ஏற்று தொடக்கம் முதலே அமர்ந்து கொண்டு வாசித்து வருகிறார்.
2015-16ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். காலை 11 மணிக்கு உரையை வாசிக்கத் தொடங்கும் போது, தேவையெனில் அமர்ந்து கொண்டு படிக்கலாம் என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வேண்டுகோள் விடுத்தார்.

அமர்ந்து கொண்டு
அதற்கு பதில் சொன்ன நிதியமைச்சர், நன்றி மேடம் அவர்களே, தேவையெனில் அமர்ந்து கொள்கிறேன் என்றார். 20 நிமிடங்கள் நின்று கொண்டு பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் பின்னர் சபாநாயகரின் வேண்டுகோளை ஏற்று அமர்ந்து கொண்டு வாசித்தார்.
முதுகுவலி பிரச்சினை
அருண் ஜெட்லிக்கு முதுகுவலி பிரச்சினை இருப்பதால் அவரால் அதிகநேரம் நிற்கமுடியாது என்பதால் இருக்கையில் அமர்ந்து கொண்டு உரையை வாசித்தார்.
கடந்த பட்ஜெட் நேரத்தில்
கடந்த ஜூலை மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த அருண்ஜெட்லி, 11 மணிக்கு பட்ஜெட் வாசிக்க தொடங்கினார். வேகமாக பட்ஜெட் வாசித்த அவர் இடையில் 2 முறை தண்ணீர் குடித்தார்.
சபை ஒத்திவைப்பு
11-45 மணி அளவில் அருண்ஜெட்லி கேட்டுக் கொண்டதால் சபை 5 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது. 61 வயதாகும் அவருக்கு முதுகுவலி ஏற்பட்டதால் சபை ஒத்திவைக்கப்பட்டது தெரியவந்தது.
நாடாளுமன்ற வரலாற்றில் பட்ஜெட் உரை வாசிக்கும் போது சபை ஒத்தி வைக்கப்பட்டது அதுவே முதல் முறையாகும்.
அமர்ந்து கொண்டு
சிறிது ஓய்வுக்குப் பின் மீண்டும் அருண்ஜெட்லி வந்து பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். அதுவரை நின்று கொண்டே பட்ஜெட்டை வாசித்த அவர் அதன்பிறகு இருக்கையில் அமர்ந்து பட்ஜெட் வாசித்தார். அதன் பிறகும் அவர் அடிக்கடி தண்ணீர் குடித்துக் கொண்டே பட்ஜெட் உரையை வாசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications