பட்ஜெட்டுக்கு முந்தைய அமைச்சரவை கூட்டம் கூடியது!
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் கூட்டப்படும் அமைச்சரவை கூட்டம் டெல்லியில் கூடியுள்ளது.
டெல்லி : லோக்சபாவில் சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பட்ஜெட் குறித்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது.
2018- 19ம் நிதியாண்டிற்கான மத்திய பொது பட்ஜெட்டானது 11 மணியளவில் லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் உரையை நிகழ்த்த உள்ள நிதியமைச்சர் அருண் ஜேட்லி காலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். பட்ஜெட் குறித்த அம்சங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர்களுக்குக் கூட தெரியாது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் கூட்டப்படும் அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் குறித்து அமைச்சர்களுக்கு தெரிவிக்கப்படும். இந்த வழக்கமான நடைமுறைக்காக பட்ஜெட் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கூட்டம் முடிந்தவுடன் அமைச்சர்கள் அனைவரும் லோக்சபா வந்தவுடன் 11 மணி முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜேட்லி வாசிக்கத் தொடங்குவார். இந்த பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறப் போகின்றன என்று பொருளாதார நிபுணர்கள் மற்றும் அனைத்து தொழில்துறையினர் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications