கர்நாடகாவில் வறட்சி.. ரூ.4,702 கோடி நிதி தேவை - மோடியிடம் சித்தராமையா நேரில் வலியுறுத்தல்
கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார்.
டெல்லி: வறட்சி நிவாரண நிதியாக 4,702 கோடி ரூபாய் நிதியை கர்நாடக மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிருப்தி தெரிவித்திருந்தார். மேலும் பிரதமர் மோடியை சந்திப்பதற்கு பலமுறை தாம் அனுமதி கேட்டிருந்ததாகவும், ஆனால் மோடி, அனுமதி அளிக்கவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான குழுவினர் பிரதமர் மோடியை நேற்று டெல்லியில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது கர்நாடக மாநிலத்தில் நிலவும் வறட்சி குறித்து மோடியிடம் விளக்கி கூறியதாக தெரிகிறது. இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், சதானந்த கவுடா, அனந்குமார், கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், காங்கிரஸ் எம்பி மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது வறட்சி நிலவுகிறது. மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளில் போதிய அளவு நீர் இருப்பு இல்லை. இதனால் கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.4,702 கோடி நிதியை ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதுதொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார் என்றார்.
-
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications