பெல்ஜியம் வெடிகுண்டு தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
டெல்லி: பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல் விமான நிலைய இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஜாவென்டம் விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. மேலும் மெட்ரோ ரயில் நிலையத்திலும் குண்டு வெடித்தது. இந்த சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

குண்டு வெடித்ததில் விமான நிலைய கூரை இடிந்து விழுந்ததால் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மோடி டுவிட்டரில், பிரஸ்ஸல்ஸில் இருந்து வரும் செய்திகள் வேதனை அளிக்கிறது. இந்த தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது. தாக்குதலில் பலியானோரின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்கிறேன்" என்று கூறியுள்ளார்.
பிரஸ்ஸல்ஸ் தாக்குதலில் இந்திய தூதரகத்தில் உள்ள இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை, அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார். மேலும், விவரங்கள் அறிய இந்திய தூதரகத்தின் உதவி எண்கள் +32-26409140, +32-26451850 (PABX) & +32-476748575 (மொபைல்) அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வரும் 30 ஆம் தேதி பிரதமர் மோடி பெல்ஜியம் செல்ல உள்ளார். திட்டமிட்டபடி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மாநாட்டில் திட்டமிட்டபடி அவர் கலந்து கொள்ளவார் என விகாஸ் ஸ்வரூப் கூறியுள்ளார்.
#Brussels Attack: Indians in Belgium can contact our Mission's Emergency numbers
— Vikas Swarup (@MEAIndia) March 22, 2016
+32-26409140
+32-26451850 (PABX) &
+32-476748575 (mobile)
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications