2000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்த முதல் பிரதமர் மோடி...
இந்தியாவில் 1978ம் ஆண்டே 10000, 5000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அப்போதைய பிரதமர் மெராஜி தேசாய் அறிவித்தார். 2000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்த முதல் பிரதமர் மோடிதான்.
டெல்லி: இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து தடை செய்வது ஒன்றும் முதல் முறையல்ல. எப்பொழுதெல்லாம் நாட்டில் கருப்புப் பணம் தலை தூக்குகிறதோ அப்போது அதிக மதிப்புகளைக் கொண்ட ரூபாயை தடை செய்வதை மத்திய அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது.
ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்று மோடி அறிவித்தது நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது. இதே போல ஒரு சம்பவம் 38 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
1978ம் ஆண்டு இந்தியாவை ஆண்ட பிரதமர் மொராஜி தேசாய் 10000, 5000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்து அவை செல்லாது என அறிவித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை.

வாஜ்பாய் காலத்தில் 1000 ரூபாய்
2000 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, இதனை தளர்த்தி ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என அறிவித்தார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பிரதமர் மோடியும் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை தடை செய்துள்ளார்.

மோடி ரூ. 2000
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் பிரதமராக மோடி பதவி வகிக்கும் இந்த நேரத்தில் புதிதாக 2000 ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்துள்ளார். இதன் மூலம் 2000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்த முதல் பிரதமர் என்ற பெருமை பெறுகிறார் பிரதமர் மோடி.

ரூ. 10 ஆயிரம் நோட்டு
1938 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் இந்தியா இருந்த காலத்தில் அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் அச்சடிக்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் கணக்கில் வராத பணங்களை தடுக்கும் நோக்கத்தில் 1946 ஆம் ஆண்டு ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு தடை செய்தது.

மொராஜி தேசாய் தடை
1954 ஆம் ஆண்டு மக்கள் வசதிக்காக 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. இதனால், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு நிதி நிர்வாகத்திலும் சிக்கல் ஏற்பட்டது. பயங்கரவாதிகள் லட்சகணக்கில் பணத்தை சுலபமாக கடத்துவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதனையடுத்து, 1978 ஆம் ஆண்டு, ஆயிரம், 5 ஆயிரம் மற்றும் 10ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அப்போதைய பிரதமர் மொராஜி தேசாய் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications