‛40 நிமிடம்’.. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் மேஜர் ‛ரோல்’ செய்த பிரதமர் மோடி! விபரம்
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பிரான் பிரதிஷ்டை சடங்குகளை செய்த பிறகு பால ராமரின் கண்கள் திறக்கப்பட்டது. இந்நிலையில் தான் பிரதமர் மோடி 40 நிமிடம் செய்த முக்கிய ரோல் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
2019ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி கொடுத்து தீர்ப்பு வழங்கியது. மேலும் கோவில் கட்டும் பணிக்காக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தா சேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது.

அதன்பிறகு 2020ல் பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கோவில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்தது. மொத்தம் 3 அடுக்குகளாக இந்த கோவில் கட்ட முடிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது முதற்கட்ட பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளது.
இதையடுத்து தான் இன்று அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான பூஜைகள், சடங்குகள் கடந்த 16ம் தேதி முதல் தொடங்கியது. கடந்த 18ம் தேதி கோவில் கருவறையில் 5 வயது குழந்தை பருவ ராமர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை தான் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதற்காக பிரதமர் மோடி கடந்த 11 நாட்கள் தீவிரமாக விரதம் கடைப்பிடித்து வந்தார். பிரம்ம முகூர்த்தத்தில் கண்விழித்த பிரதமர் மோடி ராம மந்திரங்களை உச்சரித்து உணவாக பழங்களை மட்டுமே எடுத்து கொண்டார். நீர் ஆதாரமாக இளநீர் பருகினார். மேலும் மரக்கட்டிலில் போர்வை விரித்து தூங்கினார். இந்த விரதத்தை தொடர்ந்து தான் பிரதமர் மோடி இன்று ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றார்.
அதாவது பிரதமர் மோடி இன்று காலை காலை 10:25 மணிக்கு அயோத்தி விமான நிலையம் வந்தார். அதன்படி பிரதமர் மோடி அயோத்தி விமான நிலையத்துக்கு வந்திறங்கினார். அதன்பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டரில் காலை 10.55 மணிக்கு ஸ்ரீராமஜென்ம பூமிக்கு பிரதமர் மோடி சென்றார். ஸ்ரீராமஜென்ம பூமியை சுற்றி வந்து பார்வையிட்டார்.
அதன்பிறகு மதியம் 12.05 மணிக்கு அவர் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றார். கும்பாபிஷேக விழா தொடங்கியது. கும்பாபிஷேகம் என்பது மதியம் 12.30 முதல் 12.45 மணிக்குள் நடைபெற்றது.இந்த வேளையில் பிரதமர் மோடி கோவில் கருவறையில் 'பிரான் பிரதிஷ்டை' குறிக்கும் சடங்குகளை செய்தார். பிரதமர் மோடியுடன் லட்சுமிகாந்த் தீட்சித் தலைமையிலான அர்ச்சகர்கள் குழு முக்கிய சடங்குகளை மேற்கொண்டது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் பிரதமர் மோடியுடன் கருவறைக்குள் இருந்தனர்.
பிரான் பிரதிஷ்டை முடிந்த பிறகு பால ராமரின் கண்கள் திறக்கப்பட்டது. பால ராமர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரதமர் மோடி உள்பட அங்கிருந்தவர்கள் பால ராமரை வழிப்பட்டு தீபாராதானை காட்டினர்.
அதன்பிறகு ராமர் கோவிலில் இருந்து வெளியே வந்த வரும் பிரதமர் மோடி மதியம் 1 மணிக்கு அயோத்தி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிவிட்டு மதியம் 2:10 மணிக்கு குபேர் கா திலா சிவன் கோவிலுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். அதன்பிறகு மதியம் 3.30 மணிக்கு பிரதமர் மோடி டெல்லி திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications