"பயந்து ஓடுறாரு ராகுல்.. ரேபரேலியிலும் தோல்விதான்”.. தேர்தல் பிரச்சாரத்தில் தாக்கிய பிரதமர் மோடி!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: அமேதி தொகுதியில் போட்டியிட பயந்து, ராகுல் காந்தி ரேபரேலிக்கு ஓடியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 லோக்சபா தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில், சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து களம் காண்கிறது.

PM Modi hits Rahul Gandhi after his nomination from Raebareli


மே 20ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள அமேதி, ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது. ரேபரேலி தொகுதி எம்.பியாக இருந்த சோனியா காந்தி, மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகி உள்ளதால், அந்த தொகுதியில், சோனியா காந்தியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி களமிறங்கக்கூடும் என கூறப்பட்டது.

ரேபரேலி தொகுதியில் ராகுல்: அதேபோல், காங்கிரஸ் சார்பில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அமேதி தொகுதியில் கிஷோரி லால் ஹர்மா போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியை எதிர்த்து கிஷோரி லால் ஷர்மா போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் கட்சியின் கோட்டையான ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டது. அமேதி தொகுதிக்கு பதிலாக ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி களமிறங்கி உள்ளது தேர்தல் களத்தில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொகுதி மாறிய ராகுல்: காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த அமேதி தொகுதியில், 2004 முதல் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்ற ராகுல் காந்தி, 2019 ஆம் ஆண்டில் பாஜகவை சேர்ந்த ஸ்மிருதி இரானியிடம் தோல்வியை தழுவினார். இந்நிலையில், அமேதி தொகுதியில் இம்முறை போட்டியிடாத ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் களம் காண உள்ளார்.

கேரளா மாநிலம் வயநாடு தொகுதியை தொடர்ந்து 2ஆவது தொகுதியாக ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். ரேபரேலி தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கலின் கடைசி நாளான இன்று ராகுல் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மோடி கிண்டல்: இந்நிலையில், ராகுல் காந்தி, அமேதியை தவிர்த்துவிட்டு ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் இன்று பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார்.

பாஜகவை ஒரே கல்லில் கதறவிட்ட ராகுல்- மோடிக்கும் ஆப்பு,ஸ்மிருதி இரானிக்கும் செக்-செம்ம 'ரேபரேலி' கேம்!


மோடி பேசுகையில், “வயநாட்டில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால் காங்கிரஸ் கட்சியின் இளவரசர் போட்டியிட வேறு தொகுதியைத் தேடிக் கொண்டிருந்தார். இப்போது அமேதியிலிருந்து ஓடிப்போய் ரேபரேலியை அவர் தேர்வு செய்துள்ளார்.

3வது தொகுதியை தேடிச் செல்வார்: வயநாடு தொகுதியில் தோல்வி உறுதி என்பது ராகுல் காந்திக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டது. இதனால் அவர் மேலும் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறார். ரேபரேலி தொகுதியிலும் அவருக்கு தோல்வி காத்திருக்கிறது. அடுத்து அவர் மூன்றாவது தொகுதியை தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தேர்தலுக்கு முன்பே தோல்வி பயத்தில் தொகுதிக்கு வராமல் இருக்கிறார்கள். சோனியா காந்தி தேர்தலில் போட்டியிட பயந்து ராஜ்யசபா எம்.பி ஆகி உள்ளார். இவர்கள்தான் ஊர் ஊராகச் சென்று பயப்பட வேண்டாம் எனப் பிரச்சாரம் செய்பவர்கள். நான் அவர்களுக்கு அதையே திருப்பிச் சொல்கிறேன். பயந்து ஓடி ஓளிய வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+