அயோத்தி கோவில் விழா முடிந்ததும் பிரதமர் மோடி எடுத்த முக்கிய முடிவு.. அடடே செம!
அயோத்தி: சூரிய ஒளி மின்சாரம் பெற நாட்டில் ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கப்படும் என்றும் இந்த திட்டத்தால் ஏழை, நடுத்தர மக்களின் மின்சுமை குறையும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்து முடிந்தது. கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் கடந்த 16ம் தேதி தொடங்கிய நிலையில் இன்று பிரான் பிரதிஷ்டை சடங்குகள் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி முன்னின்று இந்த சடங்குகளை செய்தார். கோவில் கருவறையில் கடந்த 18 ம் தேதி நிறுவப்பட்ட 5 வயது பால ராமர் சிலையின் பாதத்தில் பிரதமர் மோடி அமர்ந்து அர்ச்சகர் உதவியுடன் பிரான் பிரதிஷ்டை சடங்குகளை செய்தார்.

இதையடுத்து பால ராமர் சிலையின் கண்கள் திறக்கப்பட்டது. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவான இன்று பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. விழாவுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்ட பிரபலங்கள் மட்டுமே விழாவில் பங்கேற்றனர். இந்த நிலையில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற நாட்டில் ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் விழாவில் பங்கேற்று விட்டு திரும்பிய பிரதமர் மோடி முக்கிய முடிவாக இந்த திட்டத்தை எடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது:- "சூரிய ஒளி மின்சாரம் பெற நாட்டில் ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கப்படும். இந்த திட்டத்தால் ஏழை, நடுத்தர மக்களின் மின்சுமை குறையும்.
எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெறும். சூரிய ஒளி மின்சக்தியை நிறுவ பிரதமர் மந்திரி சூர்யோதயா யோஜனா திட்டம் தொடங்கப்படும். அயோத்தியில் இருந்து திரும்பிய பிறகு நான் எடுத்த முதல் முடிவு இது." என்று கூறியுள்ளார்.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications