உலக நாடுகளின் ஆதரவு இந்தியாவுக்கு இருந்தது.. காங்கிரஸ் ஆதரவு மட்டும் இல்லை.. மோடி குற்றச்சாட்டு!
டெல்லி: உலகமே இந்தியாவை ஆதரித்த போது, நமது ராணுவத்தை காங்கிரஸ் மட்டும் ஆதரிக்கவில்லை என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பின் காங்கிரஸ் தன்னை 56 இன்ச் மார்பு எங்கே என்று எள்ளி நகையாடியதாக கூறிய மோடி, காங்கிரஸ் கட்சியின் அந்த நடவடிக்கை ராணுவத்தின் மன உறுதியை குலைப்பதாக அமைந்துவிட்டதாக விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்த விவாதம் நடந்து வருகிறது. மதியம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பினார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்து வருகிறார்.

அதில் மோடி பேசுகையில், உலகமே இந்தியாவை ஆதரித்த போது நமது ராணுவத்தை காங்கிரஸ் ஆதரிக்கவில்லை. பஹல்காம் தாக்குதலுக்கு பின் காங்கிரஸ் கட்சியினர் 56 இன்ச் மார்பு எங்கே என்று என்னை எள்ளி நகையாடினர். எதிர்க்கட்சியினர் சேற்றை வாரி இறைத்தது ராணுவத்தின் மன உறுதியை குலைப்பதாக அமைந்துவிட்டது. காங்கிரஸ் தலைவர்கள் பேசியது செய்தியாகலாம்.
ஆனால் அது மக்கள் மனதில் இடம் பெறாது. இந்திய ராணுவம் கூறுவதை நம்ப மறுப்பவர்கள், பாகிஸ்தான் ராணுவம் கூறுவதை நம்புகிறார்கள். தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியதால் மட்டுமே சண்டையை நிறுத்த முடிவு செய்தோம். போரை நிறுத்தும்படி எந்த நாட்டு தலைவர்களும் இந்தியாவிடம் கூறவில்லை.
அமெரிக்கா துணை அதிபர் என்னிடம் பேசிய போது, இந்தியாவின் தாக்குதல் கடுமையாக இருக்கும். பாகிஸ்தானின் ஒவ்வொரு துப்பாக்கி குண்டுகளுக்கும், பீரங்கி மூலமாக பதிலடி இருக்கும் என்றேன். ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை.. அது தொடர்கிறது. அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானை நம்பி இருக்கிறது. மக்கள் மனங்களில் சந்தேக விதைகளை விதைக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது. வாய்ச்சொல் வீரர்கள் என்று எதிர்க்கட்சியை கண்டு நாடே சிரிக்கிறது.
அபிநந்தன் திரும்பி வந்த போது கிசுகிசுத்தவர்கள், தங்களின் வாயை மூடி கொண்டார்கள். ராணுவத்திற்கு எதிரான நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி எப்போதும் எடுக்கிறது என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த பேச்சிற்கு நாடாளுமன்றத்திலேயே காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பெயரைக் குறிப்பிடாமல் காங்கிரஸ் கட்சியின் கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications