மகளுக்கு கல்யாணம்.. பத்திரிக்கை கொடுத்த ரிக்ஷாக்காரர்.. மோடியின் இன்ப அதிர்ச்சி.. நெகிழும் குடும்பம்
Recommended Video
வாரணாசி: மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்த பாஜக தொண்டரும், ரிக்ஷாக்காரருமான மங்கல் கேவத் என்பவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் பிரதமர் மோடி.
தனது சொந்த தொகுதியான, வாரணாசியில், சமீபத்தில் ஒருநாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும், நலத்திட்டப் பணிகளையும் அப்போது அவர் துவக்கி வைத்தார்.
மேலும், அங்கு மங்கல் கேவத் என்ற, ரிக்ஷா ஓட்டுநரையும் அவர் சந்திக்க நேரிட்டது. அவர் மோடியின் தீவிர ரசிகராம். மோடியை சந்தித்த கையோடு தனது மகள் திருமணத்திற்கு, பிரதமர் மோடி கொடுத்த இன்ப அதிர்ச்சிக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ந்துள்ளார், மங்கல் கேவத்.

தீவிர ரசிகர்
மோடியுடைய தீவிர ரசிகர் மட்டுமல்ல, மோடி அரசு கொண்டுவந்த சுவச் பாரத் திட்டத்தை தனது சொந்த செலவில் தனது கிராமத்தில் முனைப்போடு செயல்படுத்துபவரும் இதே மங்கல் கேவத். மோடி இவரை சந்தித்தபோது, மறக்காமல், சுவச் பாரத் சேவை குறித்தும் பாராட்டு தெரிவித்துள்ளார். தனது கிராமத்தில் கங்கை நதிக்கரையை தனது செலவில், சுத்தமாக வைத்துக் கொண்டது குறித்து, மோடிக்கு அப்போது விளக்கியுள்ளார்.

இன்ப அதிர்ச்சி
இதுகுறித்து மங்கல் கேவத் கூறுகையில், "எனது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், முதல் பத்திரிக்கையை, பிரதமர் நரேந்திர மோடிக்குதான் கொடுக்க வேண்டும் என விரும்பினேன். எனது கோரிக்கையை பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது. டெல்லிக்கே சென்று, பிரதமரிடம் நேரில் பத்திரிக்கை வழங்கினேன். ஆச்சரியம் என்னவென்றால், பிப்ரவரி 8ம் தேதி, பிரதமரிடமிருந்து, எனது மகள் திருமணத்திற்கு வாழ்த்துச் சொல்லி, கடிதம் வந்தது. எங்களுக்கு அது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது", என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

திருமணம்
மங்கல் கேவத் மகளுக்கு பிப்ரவரி 12ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. 4 நாட்கள் முன்பாக சரியாக வாழ்த்து மடல் அனுப்பி அக்குடும்பத்தை மகிழ்ச்சிக் கடலில் தத்தளிக்க வைத்துள்ளார் பிரதமர் மோடி. இதை அந்த குடும்பம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பிரதமரே தங்களை மதித்து வாழ்த்து மடல் அனுப்பியதை பெருமையுடன் நினைவு கூர்ந்து வருகிறார்கள் அவர்கள்.
|
நன்றி
மங்கல் கேவத் தனது மனைவி ரேணு தேவியுடன் மோடியை வாரணாசியில் சந்தித்து, மோடியிடம் தனது மகள் திருமணத்திற்கு வாழ்த்து மடல் அனுப்பியதற்கு நன்றி தெரிவித்துள்ளார். பாஜக அடிமட்ட தொண்டர்களுடனும், கட்சி தலைமை மற்றும் பிரதமர் என்ற அந்தஸ்திலுள்ள மோடி போன்றோர் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சியாக பார்க்கப்படுகிறது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications