இலங்கை அதிபர் சிறிசேனாவை சந்தித்தார் மோடி.. மீனவர்கள் விவகாரம் பேசப்பட்டதா?

Subscribe to Oneindia Tamil

பனாஜி: 8வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க கோவா வந்துள்ள இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து அமைத்துள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பின், 8வது மாநாடு, கோவா மாநிலத்தில் நேற்று தொடங்கியது. இன்று நிறைவடைகிறது.

இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு இலங்கை அதிபர் மைத்ரி பாலா சிறிசேனா இந்தியா வந்தார். அவரை, பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது மீனவர்கள் விவகாரம் உள்ளிட்ட இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா மற்றும் பூட்டான் தலைவரும் கோவா வந்துள்ளனர். நேற்று சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+