கொச்சியா? கராச்சியா? பிரதமர் பேச்சால் சர்ச்சை.. மோடி கொடுத்த விளக்கத்தை பாருங்க!

குஜராத்தில் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி கொச்சி என்று கூறுவதற்கு பதில் கராச்சி என்று கூறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பிரதமர் பேச்சால் சர்ச்சை... விளக்கம் கொடுத்த மோடி - வீடியோ

    காந்திநகர்: குஜராத்தில் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி கொச்சி என்று கூறுவதற்கு பதில் கராச்சி என்று கூறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தேர்தல் நெருங்கிவிட்டது. இப்போது பாஜக பிரதமர் மோடியை முன்னிருத்தி பிரச்சாரங்களில் ஈடுப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல்நாள்தான் பிரதமர் மோடி, டிஸ்லெக்சியா மாணவர்கள் குறித்து தவறாக பேசி சர்ச்சையில் சிக்கினார்.

    இந்த நிலையில் நேற்று மாலை அவர் குஜராத்தில் பேசிய நிகழ்வு மீண்டும் சர்ச்சையாகி இருகிறது. குஜராத்தில் அவர் நேற்று பாஜக சார்பாக நடந்த தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    மோடி பேச்சு

    மோடி பேச்சு

    பிரதமர் மோடி குஜராத்தில் நேற்று குரு கோவிந்த் சிங் மருத்துவமனையில் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். இதில் 700 படுக்கை வசதிகள் உள்ளது. இதை திறந்து வைத்து அவர் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டம் குறித்து பேசினார்.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    அதில், ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டம் மூலம் பலர் பலன் அடைந்து இருக்கிறார்கள். இந்தியா முழுக்க இதனால் யார் எங்கு வேண்டுமானாலும் சிகிச்சை பெற முடியும். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது முக்கியமே கிடையாது. நீங்கள் கொல்கத்தாவில் இருந்தாலும் , கராச்சியில் இருந்தாலும் ஜாம்நகரில் சிகிச்சை பெற முடியும், என்றார்.

    பெரிய சலசலப்பு

    பெரிய சலசலப்பு

    பிரதமர் மோடி கராச்சி என்று கூறியதால் அங்கிருந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பலர் ஓ வென்று கத்த தொடங்கினார்கள். பாகிஸ்தானில் உள்ள கராச்சியை ஏன் பிரதமர் மோடி இழுக்கிறார். ஏன் அதை பற்றி அவர் இங்கே பேசுகிறார் என்று எல்லோரும் குழப்பத்திற்கு உள்ளானார்கள்.

    விளக்கம்

    விளக்கம்

    உடனே சுதாரித்துக் கொண்ட பிரதமர் மோடி, நான் கொச்சி என்பதை அப்படி கூறிவிட்டேன். நான் கடந்த சில நாட்களாக அண்டை நாடு குறித்தே சிந்தித்து வருகிறேன். அதனால் கொச்சி என்பதற்கு பதில் கராச்சி என்று கூறி விட்டேன், என்று குறிப்பிட்டார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+