ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் முன்வைக்கும் பிரச்சினைகள் சரியானவையே: மோடி பாராட்டு
டெல்லி: சீனப் பொருட்கள் புறக்கணிப்பு, இறைச்சி ஏற்றுமதிக்கு தடை உட்பட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் முன்வைக்கும் பிரச்சனைகள் சரியானவைதான் என்று பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த விஜயதசமி விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியது தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்கு முக்கிய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மோகன் பகவத் தமது உரையில், அப்போது மோடி அரசைப் புகழ்ந்து பேசிய அவர் சமூக சீர்திருத்த பிரச்சினைகள் குறித்தும் பேசினார். பசுவதை மற்றும் இறைச்சி ஏற்றுமதியை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய மோகன் பகவத், சீனப் பொருட்களை மக்கள் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அவரது உரையை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். மோகன் பகவத் முக்கிய தேசிய பிரச்சினைகள் பற்றி பேசியிருப்பதாகவும், அவர் எழுப்பிய சமூக சீர்திருத்த பிரச்சினைகள் மிகவும் பொருத்தமானவை என்றும் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications