ஓய்வூதியம் பற்றி அறிவித்த மோடி: மகிழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்கள்
டெல்லி: முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம்(ஒன் ரேங்க் ஒன் பென்ஷன்) விரைவில் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மான் கி பாத் என்ற பெயரில் ரேடியோவில் உரையாற்றி வருகின்றார். இந்நிலையில் அவர் இன்று மான் கி பாத் உரையின்போது முன்னாள் ராணுவ வீரர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஓய்வூதிய திட்டம் குறித்து அறிவித்துள்ளார்.
மோடி இன்றைய உரையில் கூறியிருப்பதாவது,

ராணுவ வீரர்கள்
ராணுவ வீரர்களின் பணியை பாராட்டுகிறேன். அவர்களுடன் பேசி வருவதால் அவர்களின் பிரச்சனைகள் குறித்து எனக்கு தெரியும். நான் அவர்களிடம் ஒரு பிரதமராக இல்லாமல் சாதாரண மனிதராக பேசிக் கொண்டிருக்கிறேன்.

ஓய்வூதியம்
ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும். இந்த திட்டம் 40 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்று கூறப்படுவதில் உண்மை இல்லை. இந்த திட்டத்தை முன்பு இருந்த அரசு நிறைவேற்றவில்லை. இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்துள்ளனர்.

மத்திய அரசு
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு செய்ததை பற்றி பலரும் விமர்சித்துள்ளனர். மத்திய அரசின் சாதனைகளை பலர் பாராட்டியுள்ளனர்.

மாணவர்கள்
சிபிஎஸ்இ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்ச்சி பெறாதவர்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம். வாழக்கையில் வெற்றி, தோல்வி என்பது ஒரு பகுதி. தோல்வியில் இருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம்.

கிஸான் டிவி
விவசாயிகளுக்காக கிஸான் டிவியை துவங்கி வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அந்த டிவி சேனல் ஒரு திறந்தவெளி பல்கலைக்கழகம். கிஸான் டிவியில் ஆசிரியரும், மாணவரும் விவசாயிகள் தான் என்றார் மோடி.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications