Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உ.பி: கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி- யோகி ஆதித்யநாத்துடன் ஜாலி ரைடு!

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கும் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். 9 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த ரயில் திட்டம் ஐஐடி கான்பூரிலிருந்து மோதி ஜீல் வரையிலானது. மெட்ரோ ரயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து 10 நிமிடம் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.

இந்நிலையில் உ.பி. மாநிலத்தில் பல்வேறு திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒன்று கான்பூர் மெட்ரோ ரயில் திட்டம். கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் மொத்த நீளம் 32 கிலோ மீட்டர். இதில் 2 வழித்தடங்கள் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதையில் செல்வதாகும். இது ரூ.11,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. முதல் வழித்தடத்தில் 21 ரயில் நிலையங்களும், இரண்டாவது வழித்தடத்தில் 8 ரயில் நிலையங்களும் உள்ளன. இன்று தொடங்கி வைக்கப்பட்ட 9 கிலோ மீட்டர் நீள மெட்ரோ ரயில் திட்டம் கான்பூர் - மோதி ஜீல் இடையே 9 நிலையங்களைக் கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் 2019-ல் தொடங்கப்பட்டன.

மெட்ரோவில் மோடி பயணம்

மெட்ரோவில் மோடி பயணம்

கொரோனா இரண்டாவது அலை இருந்தபோதும் இதன் கட்டுமானப் பணிகள் அனைத்துத் தடைகளையும், சவால்களையும் கடந்து துரிதமாக நடைபெற்றன. கட்டுமானம், சமிக்ஞை முறை, ரயில் பாதை, மின் தூக்கிகள், நகரும் படிக்கட்டு, மின்சாரப் பாதைப் பணி போன்றவை இரண்டு ஆண்டு காலத்திற்குள்ளாகவே முடிக்கும் திறமையை உ.பி. எம்.ஆர்.சி. பெற்றிருந்தது. மேலும் இன்று மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் மெட்ரோ ரயிலில் பயணித்தார். ஐஐடி மெட்ரோ முதல் கீதா நகர் வரை சுமார் 10 நிமிடங்கள் மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணித்தார்.

கான்பூர் ஐஐடி பட்டமளிப்பு விழா

கான்பூர் ஐஐடி பட்டமளிப்பு விழா

மேலும் கான்பூர் ஐஐடியில் 54-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதில் பிளாக்செயின் தொழில்நுட்ப அடிப்படையில் டிஜிட்டல் முறையில் பட்டங்களை பிரதமர் மோடி வழங்கினார். இதில் பேசிய பிரதமர், மெட்ரோ ரயில் வசதியைப் பெறுவதால் கான்பூர் நகருக்கு இது மகத்தான நாளாகும். மாணவர்கள் பயிற்சி நிறைவுப் பெறுவதால் உலகத்திற்கு விலை மதிப்பில்லாத பரிசை கான்பூர் வழங்கியிருக்கிறது. மாணவர் சேர்க்கைக்கும், கான்பூர் ஐஐடி-யிலிருந்து பயின்று வெளியேறுவதற்கும் இடையே "உங்களுக்குள் மகத்தான மாற்றத்தை நீங்கள் உணர வேண்டும். இங்கே வருவதற்கு முன் அறியாதவைப் பற்றிய அச்சம் இருந்திருக்க வேண்டும். அல்லது அறியாததுப் பற்றிய கேள்வி இருந்திருக்க வேண்டும். இப்போது அறியாததைப் பற்றிய அச்சம் இல்லை. மொத்த உலகத்தையும் கண்டறியவதற்கான துணிவை நீங்கள் இப்போது பெற்றிருக்கிறீர்கள். அறியாதவைப் பற்றிய கேள்வி இப்போது இல்லை. இப்போது அது சிறந்தவற்றுக்கான தேடலையும் மொத்த உலகத்தை ஆதிக்கம் செலுத்தும் கனவையும் கொண்டிருக்கிறது.

பன்முகத்தன்மை நகரம் கான்பூர்

பன்முகத்தன்மை நகரம் கான்பூர்

இந்தியாவின் அதிக பன்முகத்தன்மைக் கொண்ட சில நகரங்களில் ஒன்றாக கான்பூர் இருக்கிறது "சக்தி சவ்ரா சதுக்கத்திலிருந்து மதாரி பாசி வரையும், நானா சாகேப்பிலிருந்து பட்டுகேஷ்வர் தத் வரையும் இந்த நகரை நாம் சுற்றிப் பார்க்கும் போது புகழ் மிக்க கடந்த காலத்திற்குள் நாம் பயணிப்பது போலவும் தோன்றும். விடுதலைப் போராட்ட தியாகங்களின் பெருமைகளை உணர்வது போலவும் தோன்றும். 1930களில் 20-25 வயதிலிருந்த இளைஞர்கள் சுதந்திரம் பெற்ற 1947 வரை அமைதியான ஒரு பயணத்தை மேற்கொண்டிருக்க வேண்டும். அதுவே அவர்களது வாழ்க்கையின் பொன்னான கட்டமாக இருந்தது. இன்று நீங்களும் கூட அதே போன்ற பொன்னான காலத்தில் அடியெடுத்து வைக்கிறீர்கள். நாட்டுக்கு இது அமிர்த காலமாக இருப்பது போலவே உங்கள் வாழ்க்கையிலும் இது அமிர்த காலமாக இருக்கிறது.

21-ம் நூற்றாண்டும் தொழில்நுட்பமும்

21-ம் நூற்றாண்டும் தொழில்நுட்பமும்

செயற்கை நுண்ணறிவு எரிசக்தி, பருவநிலைத் தீர்வுகள், சுகாதாரத் தீர்வுகளில் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளில் நீங்கள் நிறைவேற்ற இருக்கும் நல்ல வாய்ப்பு பல தலைமுறைகளின் கனவுகளாகும். விருப்பமான இலக்குகளை முடிவு செய்கிற இந்த காலத்தில் உங்களின் திறன் முழுவதையும் பயன்படுத்தி அவற்றை சாதிக்க வேண்டும். 21 ஆம் நூற்றாண்டு என்பது தொழில்நுட்பத்தால் இயக்கப்படுவது. இந்த தசாப்தத்திலும் கூட தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் அதன் செல்வாக்கை அதிகரிக்கவிருக்கிறது. தொழில்நுட்பம் இல்லாத வாழ்க்கை பூர்த்தியடையாததாகும். வாழ்க்கையில் போட்டியும், தொழில்நுட்பமும் நிறைந்த இந்த காலத்தில் மாணவர்கள் நிச்சயம் அவற்றிலிருந்து விடுபட்டு விடுவார்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+