வெள்ள பாதிப்பை பார்வையிட்ட மோடியின் படத்தில் 'போட்டோஷாப்' ஒட்டுவேலை- நாறிப்போன மத்திய அரசின் மானம்
டெல்லி: தமிழக வெள்ள பாதிப்பை பிரதமர் மோடி ஆய்வு செய்யும் படத்தை வெளியிட்ட மத்திய அரசு, அதில் போட்டோஷாப் மூலம் ஒட்டுவேலை செய்திருப்பது சமூக வலைதளங்களில் அம்பலமாகியது. இதனால் அவமானப்பட்டுப் போன மத்திய அரசு, ஒட்டுவேலை செய்த அந்த படத்தை நீக்கிவிட்டு ஒரிஜனல் படத்தை வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் சென்னை மூழ்கிப் போனது. இந்த இயற்கை பேரவலத்தைப் பார்வையிட தனி விமானம் மூலம் நேற்று டெல்லியில் இருந்து அரக்கோணம் கடற்படை விமான தளத்துக்கு வருகை தந்தார் பிரதமர் மோடி.
EPIC Failure photoshop of narendra modi checking out chennai.. by PIB_India id. pic.twitter.com/j5FAvM8FjY
— Abhishek S N (@snabhi) December 3, 2015 பின்னர் சென்னையில் ஆளுநர் ரோசைய்யா, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோரையும் அவர் சந்தித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட படங்களை வெளியிட்டது மத்திய அரசின் ஊடகப் பிரிவான பி.ஐ.பி. அந்த படம் பி.ஐ.பி.யின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான உடனேயே அது 'போட்டோஷாப்பில்' சூப்பராக ஒட்டுவேலை செய்யப்பட்ட படம் என்பது அம்பலமானது.
C’mon, @PIB_India. Stay away from Photoshop. pic.twitter.com/VpxHtj7mHG
— Tanvi Madan (@tanvi_madan) December 3, 2015 ஹெலிகாப்டரில் இருந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார் மோடி... அப்படி பார்வையிடும் போது வெள்ளத்தில் மிதக்கும் சென்னை நகரம் மிக மிக தெளிவாக தெரிகிறது.. வானில் பறக்கும் போது சென்னை நகரம் அது எப்படி இப்படி தெளிவாக தெரியும்? இது அப்பட்டமான போட்டோஷாப் ஒட்டுவேலை என சமூகவலைதளவாசிகள் விளாசத் தொடங்கிவிட்டனர்..
மத்திய அரசின் இந்த ஒட்டுவேலை சமூக வலைதளங்கள் அனைத்திலும் வைரலாக பரவ சிறிது நேரத்தில் பி.ஐ.பி. அந்த டூப்ளிகேட் படத்தை நீக்கிவிட்டு 'ஒரிஜனல்' படத்தை அப்லோடு செய்தது.
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications