உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்! எதையும் தாங்கும் திறன் கொண்டது.. திறந்து வைத்தார் பிரதமர் மோடி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை இன்று திறந்து வைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் 1,315 மீட்டர் நீளத்தில் ரயில்வே பாலம் கட்டப்பட்ட நிலையில் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பின் முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயரமான ரயில் பாலத்தை இன்று திறந்து வைத்துள்ளார்ர் பிரதமர். கத்ரா - ஸ்ரீநகர் இடையே 2 வந்தே பாரத் ரயில் சேவையையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு 2 நாட்கள் முன்னதாக பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்வதாக இருந்தது. ஆனால் அந்த திட்டம் அப்போது கைவிடப்பட்டது. பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
இதையடுத்து பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்களை நடத்திய நிலையில் இந்திய ராணுவம் அவற்றை முறியடித்தது. இதையடுத்து பேச்சுவார்த்தைக்குப் பிறகு சண்டை நிறுத்தப்பட்டது. தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திரும்பி உள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார்.
உலகின் மிக உயரமான பாலம்
ஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் ரயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம். நில அதிர்வு மற்றும் பலத்த சூறாவளிக் காற்று சூழலை தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.
சுமார் ரூ.1,400 கோடி செலவில் கட்டப்பட்ட செனாப் பாலம், உலகின் மிக உயரமான ரயில் மற்றும் வளைவு பாலமாகும். இது ஆற்றுப் படுகையிலிருந்து 359 மீட்டர் உயரமும், பாரிஸின் சின்னமான ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் அதிக உயரமும் கொண்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8 அளவு வரை நிலநடுக்கங்களைத் தாங்கும் திறன் கொண்டது.
பூகம்பத்தையும் தாங்கும்
இந்தப் பாலம், இது 120 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டதாகவும், மணிக்கு 100 கி.மீ. வேகத்தை தாங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 260 கி.மீ வேகத்தில் வீசும் காற்றைத் தாங்கும் வகையிலும், அதிக தீவிரம் கொண்ட பூகம்பங்களைத் தாங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் இந்தப் பாலம் முக்கியப் பங்கு வகிக்கும். இந்த பாலத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த பாலத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார்.
பயண தூரம் வெகுவாகக் குறையும்
இந்தப் புதிய பாலம் வழியாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மூலம், கத்ராவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையே பயணிக்க சுமார் 3 மணி நேரம் மட்டுமே ஆகும். இதனால் தற்போதுள்ள பயண நேரம் 2 முதல் 3 மணி நேரம் வரை குறையும்.
கம்பி வழி பாலம்
இதனைத்தொடர்ந்து கம்பி வழி ரயில் பாலமான ஆஞ்சி பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். அதைத் தொடர்ந்து ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்துள்ளார் பிரதமர் மோடி.
அதைத்தொடர்ந்து, கத்ராவில் ரூ.46 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி. அங்கு ஏற்கனவே நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications