கோவாவில் கோலாகலம்.. தேசிய விளையாட்டு போட்டிகளை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
கோவா: இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று கோவாவில் தொடங்குகின்றன. இந்த போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்கிறார்.
நாளை காலை மகாராஷ்டிரா மாநிலம் செல்லும் பிரதமர் மோடி அங்கு 86 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறும் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதன் தொடர்ச்சியாக ஷீரடியில் புகழ்பெற்ற ஸ்ரீ சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்கிறார். அங்கு ஏற்கெனவே பல்வேறு நலத்திட்டங்கள் முடிவுற்றுள்ளன. அவற்றையும் பிரதமர் பக்தர்களுக்கு அர்ப்பணிக்கிறார். குறிப்பாக கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் வருகை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் அதற்கேற்றார் போல புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் புதிய தரிசன வரிசை வளாகம். இது பிரதமரால் திறந்து வைக்கப்படுகிறது.

இந்த வளாகத்தில் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பக்தர்கள் வரை தங்க முடியும். அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடம் பல்வேறு அரங்குகளை கொண்டிருகிறது. இதற்கு பிரதமர் மோடிதான் கடந்த 2018ம் ஆண்டு அடிக்கல் நாட்டியிருந்தார். இதனைத்தொடர்ந்து 182 கிராமங்களுக்கு குழாய் மூலம் தண்ணீரை கொண்டு சேர்க்கும் விதமாக உருவாக்கப்பட்ட 85 கிமீ நீளமுள்ள கால்வாய் வலையமைப்பையும் பிரதமர் விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கிறார். இது தவிர அகமதுநகர் சிவில் மருத்துவமனையில் ஆயுஷ் மருத்துவமனை, குர்துவாடி-லத்தூர் சாலை ரயில் பாதை (186 கிமீ) மின்மயமாக்கல், NH-166 இன் சாங்கிலி முதல் போர்கான் வரை நான்கு வழிப்பாதை (பேக்கேஜ்-I) போன்ற திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
அங்கிருந்து கோவா வரும் அவர் 37வது தேசிய விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார். கோவாவில் தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது இதுவே முதல்முறை. தேசிய விளையாட்டு போட்டிகள் என்பது மத்திய அரசு மற்றும் இந்தியன் ஒலிம்பிக் சங்கத்தின் நேரடி பார்வையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். இன்று தொடங்கும் 37வது தேசிய விளையாட்டு போட்டிகள் நவம்பர் மாதம் 9ம் தேதி வரை நீடிக்கிறது. 28 மைதானங்களில் 43 போட்டிகள் மொத்தம் நடத்தப்படுகின்றன. இதில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications