For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெளிப்படையாக இருங்கள், பயமின்றி பேசுங்கள்.. இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு மோடி அறிவுரை

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: வெளிப்படையாக இருங்கள், அச்சமின்றி பேசுங்கள் என்று பயிற்சி காலத்தை நிறைவு செய்துள்ள இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

2014-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு தற்போது பயிற்சி காலத்தை நிறைவு செய்துள்ள இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

 PM Modi urges young IAS officers to interact fearlessly with superiors

அப்போது அவர், மூத்த அதிகாரிகளை கண்டு பயப்படக் கூடாது. அடுத்த 3 மாதங்களில் மூத்த அதிகாரிகளிடம் பேசும்போது அச்சமின்றியும் வெளிப்படையாகவும் பேசவேண்டும். இதுவரை நீங்கள் பெற்ற பயிற்சி உங்கள் திறனையும் கற்றல் அறிவையும் மேம்படுத்திக்கொள்ளும் சிறந்த வாய்ப்பாக இருந்தது.

சூழ்நிலையுடன் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருங்கள். மக்களுடன் இணைந்து பொறுப்புடன் பணியாற்றுங்கள். உங்கள் சொந்த திறமைக்கு வலு சேர்ப்பதை போல், நீங்கள் இணைந்து பணியாற்றும் துறைக்கும் மதிப்பினை கூட்டுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

English summary
Prime Minister Narendra Modi told young IAS officers on Tuesday not be overawed by hierarchy and to be frank and fearless in their interaction with senior officers over the next three months.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X