"ஆல்ரெடி திறந்துட்டோம்".. ஷாக் தந்த தீதீ.. மம்தா பேச பேச.. உற்று கவனித்த பிரதமர் மோடி.. வீடியோ..!
பிரதமர் மோடி சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவன வளாகத்தை திறந்து வைத்தார்
கொல்கத்தா: கொல்கத்தாவில் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் 2வது வளாகத்தை, பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ளார்..!
நாடு முழுவதும் கொரோனா, ஒமிக்ரான் என 2 வைரஸ்களும் போட்டி போட்டுக் கொண்டு மக்களை கலங்கடித்து வருகின்றன.. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு சமீபநாட்களாகவே உயர்ந்துள்ளது.
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஏற்கனவே அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்..

டெஸ்ட்கள்
இப்போதைக்கு இங்கு மொத்தம் 403 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன... 19,517 படுக்கைகள் தயாராக இருக்கின்றன.. அதேபோல, மாநிலங்களுக்கு இடையேயான இயக்கத்திற்கு ஆர்டி மற்றும் பிசிஆர் டெஸ்ட் ரிப்போர்ட்கள் முடிவு கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுவது தொடர்பாக பிரதமர் மோடியுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசிக்க உள்ளதாக மம்தா பானர்ஜி நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்..

திறப்பு விழா
அந்த வகையில் இன்று, கொல்கத்தாவில் உள்ள சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் 2வது வளாகம் திறப்பு விழா நடைபெற்றது.. காணொளி வாயிலாக பிரதமர் மோடி இதை திறந்து வைத்தார்... இந்த விழாவில் காணொளி வாயிலாகவே மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்றிருந்தார்.. அப்போது மம்தா பானர்ஜி பேசும்போது, அந்த வளாகத்தை ஏற்கனவே திறந்துவிட்டதாக கூறினார்..

மருத்துவமனை வளாகம்
திறப்பு விழாவில் பேசிய மம்தா பானர்ஜி, "இந்த திட்டத்தை பிரதமர் காணொளி வாயிலாக திறந்து வைக்கிறார்.. ஆனால், இந்த நிறுவனம் மாநில அரசுடனும் தொடர்புடையது.. அதனால், நாங்கள் இதை முன்பே திறந்துவிட்டோம் என்பதை பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திட்டத்திற்கு 25 சதவீதம் நிதியை இம்மாநிலம் வழங்குகிறது என்பதையும் பிரதமர் மோடி அறிந்து கொள்ளும்போது மகிழ்ச்சி அடைவார்.. அதேபோல, புற்றுநோய் மருத்துவமனை வளாகத்துக்கான நிலத்தையும் நாங்கள் ஏற்கனவே தந்திருக்கிறோம்" என்றார்.

வீடியோ
நாங்கள் ஏற்கனவே இதை திறந்துவைத்துவிட்டோம் என்று, அதே மருத்துவமனை வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி ஷாக் தந்திருக்கிறார்.. இது தொடர்பான அந்த நிகழ்ச்சியின் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.. இந்த திட்டம் தொடர்பாக மம்தா பானர்ஜி ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல, பிரதமர் மோடி அவைகளை உன்னிப்பாக கேட்டு கொண்டே இருக்கிறார்.. இந்த வீடியோ தற்போது ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
-
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications