2 நாள் பயணமாக இன்று கர்நாடகா வருகிறார் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
பெங்களூர் : 2 நாள் பயணமாக இன்று கர்நாடகா வருகை தருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அவரது வருகையையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இருநாள் பயணமாக இன்று கர்நாடகா வருகிறார். விமானம் மூலம் இன்று மாலை மைசூர் வரும் நரேந்திர மோடி, அங்குள்ள, கணபதி சச்சிதானந்த சுவாமியின் அவதூத தத்த பீடத்திற்கு செல்கிறார். அங்கு கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவமனையை திறந்து வைக்கும் மோடி, மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் சுத்தூர் மடத்தின் மறைந்த சிவராத்திரி ராஜேந்திரா மகாசாமியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கிறார்.

இந்த விழாவை முடித்துக் கொண்டு மோடி இரவு மைசூரில் தங்குகிறார். அவர் நாளை மைசூர் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்திய அறிவியல் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் தும்கூர் மாவட்டம் குப்பி தாலுகா நிட்டுர் கிராமத்தில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் அமையும் எச்.ஏ.எல். நிறுவனத்தின் ராணுவ ஹெலிகாப்டர் உற்பத்தி பிரிவு விரிவாக்க திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அதன் பிறகு பெங்களூரு அருகே ஜிகினியில் நடைபெறும் சர்வதேச யோகா ஆராய்ச்சி மாநாட்டு விழாவை மோடி தொடங்கி வைக்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு மைசூர், துமகூர் மற்றும் பெங்களூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications