முதலில் திருட்டு பட்டம்..இப்போது கொலைப் பழியா? ஒடிஷா விகே பாண்டியனை விடாமல் விமர்சிக்கும் மோடி!
மயூர்பஞ்ச்: ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை பாதிப்பு என்பது அதிகாரத்தைப் பறிப்பதற்காக திட்டமிட்ட சதி என பிரதமர் மோடி பகிரங்கமாக குற்றம் சாட்டி இருப்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
ஒடிஷாவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. ஒடிஷாவில் ஆளும் பிஜூ ஜனதா தளமே மீண்டும் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்கின்றன ஆரூடங்கள்.

ஒடிஷாவில் எப்படியாவது அதிக லோக்சபா தொகுதிகளைப் பெற வேண்டும்; ஒடிஷாவில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என முனைப்பு காட்டுகிறது பாஜக. இதற்காக ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் செயலாளரும் பிஜூ ஜனதா தளத்தின் எதிர்காலமுமான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியனை இலக்கு வைத்து பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் விமர்சித்து வருகின்றனர்.
ஒடிஷாவின் மயூர்பஞ்ச்சில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நவீன் பட்நாயக்கின் நலன் விரும்பிகள் அனைவருமே அவரது உடல்நிலை குறித்து கவலைப்படுகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நவீன் பட்நாயக்கின் உடல்நிலை இவ்வளவு மோசமாகிவிட்டது என கவலைப்படுகின்றனர்.
நவீன் பட்நாயக்குக்கு மிக வேண்டிய- நெருக்கமான நபர்கள் அவரது உடல்நிலை குறித்து என்னிடம் கவலை தெரிவித்தனர். நவீன் பட்நாயக்கால் சுயமாக எதையும் செய்ய முடியாத அளவுக்கு அவரது உடல்நலனை பாதிப்படையச் செய்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அப்படியானால் நவீன் பட்நாயக்கின் உடல்நலனை திட்டமிட்டு சதி செய்து பாதிப்படையச் செய்தார்களா? என்கிற கேள்வி எழுகிறது. நவீன் பட்நாயக்கிடம் இருந்து அதிகாரத்தை பறித்து அதை அனுபவிக்க நினைக்கும் கூட்டம் குறித்து ஒடிஷா மக்கள் அறிந்து கொள்ளத்தான் வேண்டும். நவீன் பட்நாயக் உடல்நிலையின் மர்மம் குறித்து அம்பலப்படுத்த வேண்டும். ஜூன் 10-ந் தேதிக்குப் பின்னர் ஒடிஷாவில் பாஜக ஆட்சிக்கு வரும்.. அப்போது நவீன் பட்நாயக்கின் உடல் நலன் சீரழிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்துவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
முன்னர் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, விகே பாண்டியன் பூரி ஜெகந்நாதர் கோவில் கருவறை சாவிகளை தமிழ்நாட்டில் கொண்டு போய் ஒளித்து வைத்துவிட்டதாக திருட்டுப் பட்டம் கட்டினார். இதனால் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தமிழர்களை திருடர்கள் என்பதா என கொந்தளித்தனர். தற்போது பிரதமர் மோடி, நவீன் பட்நாயக் உடல்நலனை திட்டமிட்டு சீரழித்த கூட்டம் என விகே பாண்டியனை மறைமுகமாக விமர்சித்து கொலைப் பழி சுமத்துகிறார் என்கின்றனர் ஒடிஷா பத்திரிகையாளர்கள்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications