For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆஹா.. பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கத்தில் சிலை.. எடை எவ்வளவு தெரியுமா? அப்படியே ஜொலிஜொலிக்குதே!

Google Oneindia Tamil News

காந்தி நகர்: பிரதமர் நரேந்திர மோடியின் மார்பளவு தங்க சிலை தொடர்பான போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி வருகிறது. அப்படியே தகதகவென ஜொலிக்கும் இந்த தங்க சிலை பார்வையாளர்களை கவர்ந்து வரும் நிலையில் தான் அந்த தங்க சிலை பற்றிய பல்வேறு சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது குஜராத் தேர்தலில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில் சூரத்தில் இயங்கும் நகை தயாரிப்பு நிறுவனம் இந்த தங்க சிலையை தயாரித்த தெரியவந்துள்ளது. மேலும் அதன் எடை என்ன? எத்தனை பேர் சேர்ந்து தங்கத்தில் பிரதமர் மோடியின் சிலையை வடிவமைத்தனர்? என்பது பற்றிய பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதற்கு 2 கட்டமாக கடந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடந்தது. அதன்படி 2022 டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 என 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது.

இந்த தேர்தல்களில் பதிவான ஓட்டுக்கள் டிசம்பர் 8 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆளும் பாஜக கட்சி அமோக வெற்றி பெற்றது.

‛ஒரேபோடு’.. பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படம்.. பின்னணி இதுதான்.. கொதித்த குஷ்பு.. பரபர ட்விட் ‛ஒரேபோடு’.. பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படம்.. பின்னணி இதுதான்.. கொதித்த குஷ்பு.. பரபர ட்விட்

பாஜக அமோக வெற்றி

பாஜக அமோக வெற்றி

குஜராத் தேர்தல் வரலாற்றில் இல்லாத வகையில் பாஜக கட்சி வாகை சூடி ஆட்சியை தக்க வைத்தது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 182 சட்டசபை தொகுதிகளில் பாஜக 156 இடங்களில் வென்று சரித்திரம் படைத்தது. மேலும் கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் தொடர்ந்து 7வது முறையாக குஜராத்தில் அந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

காங்கிரஸ் படுதோல்வி

காங்கிரஸ் படுதோல்வி

இந்த தேர்தலில் காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் பெரும் பின்னடைவை சந்தித்தன. குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடி விழுந்தது. கடந்த முறை 77 இடங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி வெறும் 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆம்ஆத்மி கட்சி 5 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். ஆம்ஆத்மி ஓட்டுக்களை பிரித்தது காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடிக்கு தங்கத்தில் சிலை

பிரதமர் மோடிக்கு தங்கத்தில் சிலை

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் குஜராத் என்பதால் இருவரும் நேரடியாக களமிறங்கி வியூகங்கள் வகுத்து மிகப்பெரிய வெற்றியை அறுவடை செய்தனர். இந்த வெற்றியில் இவர்கள் இருவரின் பங்கு மிகவும் முக்கியமானது. இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கத்தில் சிலை செதுக்கப்பட்டு இருக்கும் போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளன.

18 காரட் தங்கத்தில் மார்பளவு சிலை

18 காரட் தங்கத்தில் மார்பளவு சிலை

இதுபற்றி விசாரித்தபோது முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது குஜராத் தேர்தலில் பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சூரத்தில் உள்ள நகை தயாரிப்பு நிறுவனம் தங்கத்தில் சிலை வடிவமைத்து இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது குஜராத்தில் 156 தொகுதிகளில் பாஜக வென்றதை குறிக்கும் வகையில் 156 கிராம் எடையில் 18 காரட் தங்கத்தில் பிரதமர் மோடியின் மார்பளவு சிலையை உருவாக்கி இருப்பது தெரியவந்துள்ளது.

20 பொற்கொல்லர்கள் வடிவமைப்பு

20 பொற்கொல்லர்கள் வடிவமைப்பு


இந்த சிலை 20 பொற்கொல்லர்களால் நுணுக்கமாக செதுக்கி உருவாக்கி உள்ளனர். சிலைக்கு பயன்படுத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு என்பது ரூ.11 லட்சம் என கூறப்படும் நிலையில் சிலையை பலரும் இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த சிலையை விலைக்கு வாங்க பலர் ஆர்வமாக உள்ளனர். இருப்பினும், விற்பது குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் வசந்த் போரா இன்னும் முடிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.

English summary
Photos of Prime Minister Narendra Modi's golden bust are appearing on the internet. While this golden statue, which shines appropriately, is attracting the audience, various interesting information about the golden statue has come out. In other words, when the BJP won 156 seats in the Gujarat elections, it has been revealed that a jewelry manufacturing company operating in Surat has made this gold statue. And what does it weigh? How many people together designed the statue of PM Modi in gold? Various important information has been released about it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X