ஜனாதிபதியாக பிரணாப் கிடைத்தது மிகப் பெரிய கவுரவம்- பிறந்த நாள் வாழ்த்தில் மோடி புகழாரம்!!
டெல்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜனாதிபதியாக பிரணாப் நமக்கு கிடைத்தது மிகப் பெரிய கவுரவம் என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று தமது 72வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி ஜனாதிபதி மாளிகையில் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து பிரதமர் மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும் தமது ட்விட்டர் பக்கத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
Pranab Da has given his life to India. Few people can match his political experience & stature. We are honoured to have a President like him
— Narendra Modi (@narendramodi) December 11, 2014 நீங்கள் நல்ல உடல் ஆரோகியத்துடனும் மனஉறுதியோடும் நீண்ட காலம் வாழ வேண்டும். பிரணாப் முகர்ஜி தம் வாழ்க்கையை இந்தியாவிற்காக அர்ப்பணித்தவர்.

பிரணாப் முகர்ஜியின் அரசியல் அனுபவத்தோடும் அவரது தகுதியோடும் ஒரு சிலரை மட்டுமே ஒப்பிட முடியும். நமது நாட்டின் ஜனாதிபதியாக பிரணாப் கிடைத்தது நாம் அனைவருக்கும் கிடைத்த மிகப் பெரிய கவுரவம்.
இவ்வாறு பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications